Page Loader
5ஜி டேட்டாவுடன் ஏர்டெல்லின் அட்டகாசமான திட்டங்கள் இங்கே!
ஏர்டெல் அட்டகாசமான ரீசார்ஜ் திட்டங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

5ஜி டேட்டாவுடன் ஏர்டெல்லின் அட்டகாசமான திட்டங்கள் இங்கே!

எழுதியவர் Siranjeevi
Mar 29, 2023
05:12 pm

செய்தி முன்னோட்டம்

தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கும் வரம்பற்ற 5G டேட்டா சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. 5ஜி டேட்டா மட்டுமின்றி டிஸ்னி ஹாட்ஸ்டாரின் இலவச OTT சந்தா போன்ற கூடுதல் பலன்களையும் வழங்குகிறது. 399 திட்டம் ஏர்டெல்லின் 399 ரூபாய் திட்டத்தில் 28 நாட்கள் வேலிட்டியுடன் ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 3 மாத சந்தாவையும் 2.5ஜிபி தினசரி டேட்டா, வரம்பற்ற கால் போன்ற சலுகைகளை வழங்கி வருகிறது. 499 திட்டம் 499 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா கிடைக்கும். ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 3 மாத இலவச சந்தா மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ் எஸ்எம்எஸ் 100 போன்றவற்றை கிடைக்கிறது.

ஏர்டெல் திட்டங்கள்

ஏர்டெல்லின் அட்டகாசமான ரீசார்ஜ் திட்டங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

839 திட்டம் 839 ரூபாய் திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 2ஜிபி தினசரி டேட்டா நன்மைகளுடன் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. மேலும், 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. புதிய திட்டம் புதிய திட்டமாக 155 ரூபாயில் 24 நாட்கள் மட்டும் வேலிடிட்டி, 1ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு இலவச ஹெலோ டியூன்கள், வின்க் மியூசிக் சந்தா வழங்கப்படுகிறது. இதுவே 99 ரூபாய் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி, 200எம்பி டேட்டா அழைப்புகளுக்கு நொடிக்கு 2.5 பைசா கட்டணம் வசூலிக்கிறது.