ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் கிரிக்கெட் திட்டங்களில் எது சிறந்தவை?
செய்தி முன்னோட்டம்
இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியை காண ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன.
அதில் ஜியோ நிறுவனம் ரூ.219 திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டாவையும், பார்தி ஏர்டெல் நிறுவனம் 3ஜிபி பேக்குகளை சேமித்துள்ளது. இதில் எவை சிறந்தத் என்பதை பற்றி பார்ப்போம்.
ஜியோவின் கிரிக்கெட் ரூ.219 திட்டம் 14 நாட்கள் செல்லுபடியாகும். ஒரு நாளுக்கு 3ஜிபி டேட்டா மற்றும் கால், 100 எஸ்எம்எஸ் கூடுதலாக இரண்டு ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
ஜியோ 399 ரூபாய் திட்டத்திலும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் நாளுக்கு 3ஜிபி டேட்டா கூடுதலாக 6ஜிபி-யையும் வழங்குகிறது.
அதுவே ஏர்டெல்லில் 499 திட்டத்தின்படி கால், எஸ்எம்எஸ், 3ஜிபி டேட்டா, கூடுதல் 6ஜிபி வழங்குகிறது.
ரீசார்ஜ் திட்டங்கள்
ஜியோ மற்றும் ஏர்டெல் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் இங்கே
மூன்று மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விங்க் மியூசிக் மற்றும் ரூ. 100 ஃபாஸ்டேக் கேஷ்பேக்கையும் வழங்குகிறது.
ஜியோ 999 ரூபாய் திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் அதே 3ஜிபி கால், 40ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் இலவச ஜியோ ஆப் சூட் மெம்பர்ஷிப்பை வழங்குகிறது.
ஏர்டெல் 699 ரூபாய் திட்டத்தில் 56 நாட்களுக்கு 3ஜிபி டேட்டாவுடன், பிரைம் வீடியோ மற்றும் எக்ஸ்ட்ரீம் அணுகல், ஹெலோட்யூன்ஸ், விங்க் மியூசிக் FASTag இல் 100 வழங்கி வருகிறது.
இதனிடையே, ஜியோ திட்டம் மலிவாக இருந்தாலும், ஏர்டெல் OTT மற்றும் FASTag கேஷ்பேக் மற்றும் பலவற்றையும் வழங்குகிறது. இதனால் ஏர்டெல் கேஷ்பேக் ஓடிடிக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.