Page Loader
AI எதிர்காலத்தை மாற்றும்! IBM CEO அரவிந்த் கிருஷ்ணா
AI எதிர்காலத்தில் இந்த கடினமான வேலைகளை எல்லாம் மாற்றும் IBM CEO அரவிந்த் கிருஷ்ணா

AI எதிர்காலத்தை மாற்றும்! IBM CEO அரவிந்த் கிருஷ்ணா

எழுதியவர் Siranjeevi
Feb 18, 2023
10:09 am

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு ஆனது பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களின் AI-யை வெளியிட்டு வருகின்றனர். அதிலும், சாட்ஜிபிடி ஆனது எதிர்பாராத அளவுக்கு வளர்ந்துள்ளது. கூகுளுக்கு போட்டியாக பிரபலமாகிவிட்டது. இந்நிலையில், ஐபிஎம்மின் AI வணிகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியை, IBM CEO அரவிந்த் கிருஷ்ணா தெரிவிக்கையில், உலக அளவில் தொழிலாளர் பற்றாக்குறைக்கு AI உதவமுடியும். எங்களுக்கு நிஜ உலகில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. அதற்கு காரணம் உலகில் மக்கள் தொகை பிரச்சினை தான் எனக்கூறினார். அமெரிக்கா இப்போது 3.4 சதவீத வேலையின்மையில் அமர்ந்திருக்கிறது, இது 60 ஆண்டுகளில் இல்லாதது.

IBM CEO அரவிந்த் கிருஷ்ணா

எதிர்காலத்தில் AI செயல்பாடுகள் மிகவும் உதவும் - IBM CEO அரவிந்த் கிருஷ்ணா

எனவே உழைப்பின் சில பகுதிகளை மாற்றும் கருவிகளை நாம் கண்டுபிடிக்கலாம், இந்த நேரத்தில் இது ஒரு நல்ல விஷயம் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, AI பணியமர்த்தல் அல்லது பதவி உயர்வுகள் மூலம் வணிகங்களுக்கு உதவ முடியும் என கிருஷ்ணா கூறியுள்ளார். நிதிச் சேவைகளில் நிர்வாகப் பணிகளில் அல்லது சுகாதாரப் பாதுகாப்பில் சில பணிகளில் ஒரு மனித ஊழியரை விட AI சிறந்த வேலையைச் செய்ய முடியும் என்றும் CEO கூறினார். மேலும், ஒவ்வொரு நிறுவனத்திலும் இதுபோன்ற நூற்றுக்கணக்கான செயல்முறைகள் உள்ளன, எனவே எழுத்தர் காகித பணியை இதன் மூலம் மாற்ற முடியும் என்று நான் நினைக்கிறேன் எனவும் தெரிவித்தார்.