Page Loader
சூரியனிலிருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பிய ஆதித்யா L-1 விண்கலம் 
சூரியனிலிருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பும் ஆதித்யா L-1 விண்கலம்

சூரியனிலிருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பிய ஆதித்யா L-1 விண்கலம் 

எழுதியவர் Nivetha P
Nov 07, 2023
08:53 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த செப்டம்பர்-2ம்.,தேதி ஆந்திரா-ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சூரியனை ஆய்வுச்செய்ய பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் இஸ்ரோ 'ஆதித்யா L1' என்னும் விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த விண்கலமானது பூமியிலிருந்து 15 கிமீ.,தொலைவிற்கு 125 நாட்கள் பயணம் செய்து லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ சென்றடையும், அதன் பின்னர் சூரியனை ஆய்வு செய்யும் பணியினை துவங்கும் என்றும் கூறப்பட்டது. அதன்படி தற்போது இந்த விண்கலம் பூமியின் ஈர்ப்பு மண்டலத்தை விட்டு வெளியேறியுள்ளது. இந்நிலையில், இது தற்போது சூரியனின் அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. முதன்முறையாக கடந்த 29ம்.,தேதி கிராப் வடிவில் பதிவான இப்புகைப்படத்தினை இஸ்ரோ இன்று(நவ.,7)வெளியிட்டுள்ளது. சூரியனின் ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்து ஆய்வு மேற்கொள்ள இது உதவும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

சூரியனின் எக்ஸ் கதிர்கள்