ஏசி வாங்க போறீங்களா...? கண்டிப்பா இதை எல்லாம் மறக்காம செய்யுங்க!
கோடைக்காலம் தொடங்க ஆரம்பித்துவிட்டதால், பலரும் ஏசி வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஏசி வாங்கும் போது சில விஷயங்களை மனதில் வைத்து கவனமாக இருக்க வேண்டும். முதலில் ஏசி வாங்க உங்கள் பட்ஜெட்டை மனதில் வைத்துக்கொண்டால், முடிவுகளை எடுப்பது மிகவும் எளிதாகும். அதேப்போன்று ஆஃப்லைனில் வாங்க வேண்டும் என்றால், அதன் ஆன்லைன் விலையை சரி பார்க்க வேண்டும். 2 டன் ஏசி மிகவும் குளிராக இருக்கும். ஷாப்பிங் செய்யும்போது, உங்கள் அறையின் அளவை மனதில் கொள்ளுங்கள்.
புதிதாக ஏசி வாங்கப்போறீங்களா? கண்டிப்பா இதை தெரிஞ்சு வைச்சுக்கோங்க
120 சதுர அடி அறைக்கு 1 டன் ஏர் கண்டிஷனர் போதுமானது. உங்களிடம் பெரிய அறை இருந்தால் 1.5 அல்லது 2 டன் ஏசியைப் பெறுங்கள். ஏசியைப் பொறுத்தவரை குறைந்த பவர் ரேட்டிங் கொண்ட ஏசிகள் விலை குறைவாக இருக்கும். ஆனால் அவை அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. எனவே, அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசியை வாங்கினால் மின் கட்டணத்தை சேமிக்க முடியும். குறைந்த பட்சம் 3 - 6 மாதங்களுக்கு ஒரு முறை ஏசியை முழுதாக சர்வீஸ் செய்ய வேண்டும். எனவே நீங்கள் வாங்கும் பிராண்டுக்கான சர்வீஸ் உங்கள் பகுதியில் கிடைக்கிறதா? ஏதேனும் பழுது என்றால் உடனடியாக சேவை கிடைக்குமா என்பதை பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.