இந்த வருடம் வறட்சி ஏற்படுவதற்கு வாய்ப்ப: நிபுணர்கள் எச்சரிக்கை
சில வாரங்களுக்கு முன், வட இந்தியாவில் அளவு கடந்த பனியும் குளிரும் மக்களின் இயல்பான வாழ்க்கையை வெகுவாக பாதித்தது என்று கேள்விப்பட்டிருப்போம். அதே போல், அதீத வெப்பம் இந்தியாவை தாக்கினால் எப்படி இருக்கும்? அப்படி தான் இருக்க போகிறது இந்த வருடத்தின் கோடை காலம் என்கிறார் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம். ராஜீவன். மேலும், "எல் நினோ" என்னும் விளைவால் இந்தியாவின் தட்பவெட்பம் மிகவும் பாதிக்கப்படும் என்கிறது அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம்(NOAA). இதனால், இயல்பை விட பருவமழை குறைவாகவே இருக்கும் என்றும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இந்த "எல் நினோ" விளைவு இருக்கும் என்றும் NOAA கூறியுள்ளது.
"எல் நினோ" என்றால் என்ன?
எல் நினோ மற்றும் லா நினா ஆகியவை வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் தொடர்ச்சியான காலநிலை மாற்றமாகும். பொதுவாக, ஒரு வருடத்தில் எல் நினோ இருக்கிறது என்றால் அந்த வருடத்தில் மழைப் பொழிவு குறைவாக இருக்கும் என்பது அர்த்தமாகும். அதனால் வறட்சியும் ஏற்படக்கூடும். கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்தியா எல் நினோவை சந்தித்தது. அதனால், அதை தொடர்ந்து வந்த நன்கு வருடங்களும் பருவமழை செழிப்பாக பெய்தது. இந்த வருடம், ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் எல் நினோ வருவதற்கு 50% வாய்ப்பு இருக்கிறது என்றும், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் எல் நினோ வருவதற்கு 58% வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.