-4°C வெப்பநிலை: வட இந்தியாவில் வரலாறு காணாத குளிர் வரப்போகிறது
அடுத்த வாரம் வரலாறு காணாத அளவு வட இந்தியாவில் வெப்பநிலை -4°C வரை குறையும் என்று வானிலை நிபுணர் ஒருவர் கணித்துள்ளார். இந்த வாரம் வட இந்தியாவில் வெப்பநிலை சிறிது சிறிதாக அதிகரித்து வருவதால், அடுத்த வாரம் மிகவும் குளிராக இருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். ஜனவரி 14 முதல் 19 வரை கடுமையான குளிர் இருக்கும் என்றும் ஜனவரி 16 முதல் 18 வரை இந்த குளிர் உச்சத்தை தொடும் என்றும் ஆன்லைன் வானிலை தளமான லைவ் வெதர் ஆஃப் இந்தியாவின் நிறுவனர் நவ்தீப் தஹியா ட்வீட் செய்துள்ளார். டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் சனிக்கிழமை முதல் கடும் குளிர் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.