Page Loader
கங்கா விலாஸ் சுற்றுலா கப்பல்: தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
கங்கா விலாஸ் சொகுசு கப்பல்

கங்கா விலாஸ் சுற்றுலா கப்பல்: தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

எழுதியவர் Sindhuja SM
Jan 09, 2023
06:04 pm

செய்தி முன்னோட்டம்

உலகின் மிக நீண்ட பயணம் செய்யும் சுற்றுலா கப்பலை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த கப்பல் வாரணாசியில் இருந்து கிளம்பி வங்க தேசம் வழியாக அசாம் செல்கிறது. இந்த சொகுசு கப்பலுக்கு கங்கா விலாஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கப்பலின் முதல் பயணத்தை ஜனவரி 13ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது ஜனவரி 13ஆம் தேதி வாரணாசியில் இருந்து கிளம்பி, காசிப்பூர், பாட்னா, கொல்கத்தா வழியாக சென்று மார்ச் 1ஆம் தேதி அசாம் மாநிலம் திப்ருகரை அடைகிறது. இந்தியாவின் மிகப்பெரும் நதிகளான பிரம்மபுத்ரா மற்றும் கங்கையில் இந்த கப்பல் பயணம் செய்ய இருக்கிறது. இந்த கப்பலுக்குள் சொகுசு அறைகள், உடற்பயிற்சி கூடம், ஸ்பா போன்ற வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது,

ட்விட்டர் அஞ்சல்

பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் சொகுசு கப்பல்: