ஸ்மார்ட்வாட்ச் பயனர்களிடம் நடத்தப்பட்ட புதிய ஆய்வு!
அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை கவுண்டர்பாய்ண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஐபோனைப் பயன்படுத்தும் 80% பயனர்கள் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்சையே பயன்பாடுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். இரண்டாவதாக, கூகுளின் பிக்ஸல் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தும் 71% வாடிக்கையாளர்கள் கூகுளின் பிக்ஸல் ஸ்மார்ட்வாட்சைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், சாம்சங் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் 40% மட்டுமே சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்வாட்சைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்திருக்கின்றனர். 2022-ன் நான்காம் காலாண்டில் ஒவ்வொரு மூன்று ஐபோனுக்கும் ஒரு ஸ்மார்ட்வாட்டை விற்பனை செய்திருக்கிறது ஆப்பிள். இதுவே, சாம்சங் நிறுவனமோ ஒவ்வொரு 10 ஸ்மார்ட்போனுக்கும் ஒரு ஸ்மார்ட்வாட்சை விற்பனை செய்திருக்கிறது. 2022-ல் அமெரிக்க ஸ்மார்ட்வாட்சை சந்தையில் 56% ஆக்கிரமித்திருக்கிறது ஆப்பிள்.
அமெரிக்க ஸ்மார்ட்வாட்ச் பயனர்கள்:
ஆப்பிளின் ஸ்மார்ட்வாட்சை தேர்தெடுத்ததற்கு அந்த 'பிராண்டு' தான் காரணம் எனத் தெரிவித்துள்ளனர் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் பயனர்கள். ஹெல்த், தினசரி நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, நோட்டிபிகேஷன் வசதி, மெஸேஜ் மற்றும் காலிங் ஆகிய வசதிகளே ஸ்மார்ட்வாட்ச் பயனர்களுக்கு தங்களது ஸ்மார்ட்வாட்சகளில் பிடித்த முக்கியமான வசதிகளாக இருக்கிறது. ஹெல்த் மற்றும் தினசரி நடவடிக்கை கண்காணிப்பு வசதிகளான ஸ்டெப் கவுண்டர், இதயத் துடிப்பு அளவீடு மற்றும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவீடு ஆகிய வசதிகள் வயது முதிர்ந்தவர்களுக்கு மிகவும் பிடித்த வசதிகளாக இருக்கிறது. நோட்டிபிகேஷன், மெஸேஜ் மற்றும் காலிங் வசதிகள் இளம் தலைமுறையினருக்கு பிடித்த வசதிகளாக இருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தாங்கள் அடுத்த வாங்கப்போதும் ஸ்மார்ட்வாட்ச் ஆப்பிளுடையதாக இருக்கும் என 77% ஸ்மார்ட் பயனர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.