30 களில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 6 பணம் சம்மந்தப்பட்ட தவறுகள்
உங்களது 30 களில், பின்வரும் நிதி சம்மந்தப்பட்ட தவறுகள் செய்யக்கூடாது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கிரெடிட் கார்டுகள் பயன்பாடு: நீங்கள் இப்போது கிரெடிட் கார்டு பயன்படுத்தி கொண்டிருக்கிறீர்கள் என்றால், எல்லா செலவுகளுக்கும் கிரெடிட் கார்டை பயன்படுத்தக் கூடாது அவசரகால நிதி ஒதுக்காமல் இருப்பது: இப்போதிருந்தே ஒரு தொகையை அவசரகால வைப்பு நிதிக்கு ஒதுக்கி வைக்க வேண்டும். இந்த சேமிப்பு கணக்கு 3 -6 மாத குடும்ப செலவுகளை பராமரிக்க தேவையான அளவு இருக்க வேண்டும். வேலை இழப்பு அல்லது மருத்துவச் சிக்கல்கள் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளை சமாளிக்க உதவும். காப்பீடு இல்லாமை: மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு எதிர்காலத்துக்கான சிறந்த பாதுகாப்பாகும். மருத்துவ செலவுகள், மற்றும் உங்கள் குடும்பத்துக்கு பயன்படும்.
எதிர்கால சேமிப்புக்கான டிப்ஸ்
வங்கி கடன்கள்: ஒரு வேளை, நீங்கள் வங்கி கடன்களோ, EMI ஏதேனும் செலுத்திக் கொண்டிருந்தாள், முதலில் அதிக வட்டி இருக்கும் கடனை அடைக்க வேண்டும். இல்லையென்றால் அது நீண்டுகொண்டே போகும். நீங்கள் எவ்வளவு விரைவாக கடனை அடைக்கிறீர்களோ, அந்த அளவுக்கு பணத்தை, இதர செலவுகளுக்கு பயன்படுத்தலாம். புதிய வீடு வாங்குதல்: புதிய வீடு வாங்கும் முன், கையிருப்பில் தேவைக்கும் அதிகமாக முதல் இருந்தால் மட்டுமே வாங்கவும். ஏனெனில் வீடு வாங்கிய பின், அதன் பராமரிப்பு செலவுகளும் சேர்ந்தே வரும் என்பதை கருத்தில் கொள்ளவும். ஆடம்பர செலவுகள்: தேவைக்கு மிஞ்சி, ஆடம்பரமாக செலவு செய்தால், கை இருப்பில் பண பற்றாக்குறை நேரிடும். உல்லாச பயணம் திட்டமிடும் போதும் இதை கவனத்தில் கொள்ளவும்.