LOADING...
நோயெதிர்ப்பு சக்தியில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்ட மூவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

நோயெதிர்ப்பு சக்தியில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்ட மூவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 06, 2025
03:39 pm

செய்தி முன்னோட்டம்

மேரி இ. ப்ரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சாககுச்சி ஆகிய மூவருக்கும் வெளிப்புற நோயெதிர்ப்புச் சக்தி சகிப்புத்தன்மை (Peripheral Immune Tolerance) குறித்த அவர்களின் முன்னோடி ஆராய்ச்சிக்காக 2025 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. நமது உடல் அதன் சொந்த திசுக்களைத் தவறுதலாகத் தாக்காமல், நோய் எதிர்ப்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்துகொள்வதில் அவர்களின் கண்டுபிடிப்புகள் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுவே தன்னுடல் தாக்க நோய்களுக்கு (Autoimmune Diseases) முக்கியக் காரணம் ஆகும். இந்த மூவரின் ஆராய்ச்சியும், சீராக்கும் டி செல்கள் (Regulatory T cells) எனப்படும் சிறப்பு நோயெதிர்ப்பு உயிரணுக்களின் முக்கியப் பங்கை வெளிப்படுத்தியது.

விபரம்

ஆராய்ச்சி விபரம்

1995 ஆம் ஆண்டில், ஷிமோன் சாககுச்சி இந்த புதிய வகைக் காப்பாளர் செல்களை அடையாளம் கண்டதன் மூலம், அதுவரை நிலவி வந்த கருத்துக்களை நீர்த்துப் போக செய்தார். இந்த செல்கள் உடலின் சொந்த செல்களைத் தாக்காமல் பாதுகாக்கும் பணியைச் செய்கின்றன. இதற்குப் பிறகு, மேரி ப்ரன்கோவ் மற்றும் ஃப்ரெட் ராம்ஸ்டெல் ஆகியோர் 2001 ஆம் ஆண்டில் ஒரு மரபணுக் கண்டுபிடிப்பை மேற்கொண்டனர். தன்னுடல் தாக்க நோயால் பாதிக்கப்பட்ட எலிகளை ஆய்வு செய்தபோது, இந்தக் கட்டுப்பாடு செயல்பாட்டிற்குப் பொறுப்பான Foxp3 என்ற மரபணுவை அவர்கள் கண்டறிந்தனர். மனிதர்களில் Foxp3 மரபணுவில் ஏற்படும் பிறழ்வுகள், அரிதான ஆனால் தீவிரமான ஐபெக்ஸ் நோய்க்கு (IPEX syndrome) காரணமாகின்றன என்பதையும் அவர்கள் உறுதி செய்தனர்.

நிரூபணம்

சீராக்கும் டி செல்கள் உருவாவது நிரூபிப்பு

பின்னர் சாககுச்சி, இந்த அத்தியாவசிய சீராக்கும் டி செல்கள் உருவாவதை Foxp3 மரபணுவே ஒழுங்குபடுத்துகிறது என்பதை நிரூபித்தார். நோபல் குழுவின் கூற்றுப்படி, நமக்கு ஏன் தீவிரமான தன்னுடல் தாக்க நோய்கள் வருவதில்லை என்பதைப் புரிந்துகொள்வதற்கு அவர்களின் கண்டுபிடிப்புகள் முக்கியமானவையாகும். இந்தச் சகிப்புத்தன்மை கருத்து இப்போது, தன்னுடல் தாக்க நோய்கள், புற்றுநோய் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான புதிய சிகிச்சை உத்திகளுக்கு அடித்தளமாகச் செயல்பட்டு, உலகளவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மருத்துவத்தின் மீது நம்பிக்கையை அளிக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post