சர்வதேச அருங்காட்சியக தினம் 2023: இந்தியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள்
உலகம் முழுவதிலும் பழங்கால பொருட்கள், பொக்கிஷங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவது வழக்கம். அந்த இடத்திற்கு பெயர்தான் அருங்காட்சியகம். பாரிஸில் உள்ள லூவ்ரே முதல் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம் வரை உலகெங்கிலும் உள்ள நன்கு அறியப்பட்ட அருங்காட்சியகங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கூடும். அதேபோல், இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான சில அருங்காட்சியகங்களைப் பற்றி பார்ப்போம். நேஷனல் மியூசியம், தில்லி: இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம் இது. புது தில்லியில் அமைந்துள்ள இந்த தேசிய அருங்காட்சியகம், 1949-இல் நிறுவப்பட்டது. அரச காலத்து நகைகள், கவசங்கள் முதல், அவர்கள் பயன்படுத்திய சொகுசு ரயில் பெட்டிகள் வரை இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.அரசு அருங்காட்சியகம் சென்னை: 1851-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில், பண்டைய அரசினை பறைசாற்றும் வரலாற்று பதிவுகள் உள்ளது.
இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள்
சலார் ஜங் அருங்காட்சியகம், ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள சாலார் ஜங் அருங்காட்சியகத்தில், உலகெங்கிலும் உள்ள ஓவியங்கள், துணிகள், உலோகக் கலைப்பொருட்கள், கடிகாரங்கள் மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றின் சிறந்த தொகுப்பு உள்ளது. தேசிய ரயில் அருங்காட்சியகம், புதுடெல்லி: இந்திய ரயில்வேயின் வரலாற்றை பறைசாற்றும் அருங்காட்சியகம் இது. இது பழங்கால மரச்சாமான்கள், பெட்டி செய்யும் மாதிரிகள், வரலாற்று புகைப்படங்கள், ரயில்வே கருவிகள் போன்றவை உள்ளது. நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம், விசாகப்பட்டினம்: ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும், விசாகப்பட்டினத்தின் நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகத்தில், 1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. கலிகோ மியூசியம் ஆஃப் டெக்ஸ்டைல்ஸ், அகமதாபாத்: இது தொழிலதிபர் கெளதம் சாராபாய் மற்றும் அவரது சகோதரி கிரா, ஆகியோரால் 1949-இல் நிறுவப்பட்டது.