உலக பால் தினம்: பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கான சிறந்த மாற்று இதோ!
உலக பால் தினம்: ஆண்டுதோறும், பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், பாலை உலக உணவாக கருதவும், ஐநா சபை, ஜூன் 1-ஆம் தேதியை உலக பால் தினமாக அறிவித்தது. இருப்பினும், ஊட்டச்சத்து நிறைந்த பாலால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். அவர்களுக்காக, இந்த உலக பால் தினத்தில், பாலில் உள்ள அதே புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வேறு பொருட்களால் தயாரிக்கப்படும் 'மாற்று பாலை' பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள் . சோயா பால்: சோயா பால், பசும்பாலுக்கு பதிலான மாற்றுகளில் முக்கியமான ஒன்றாகும். அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும் பாலிலும் உள்ளது. இது வெண்ணிலா மற்றும் ஸ்ட்ராபெரி போன்ற பல்வேறு சுவைகளில் கிடைக்கிறது.
உலக பால் தினம்
முந்திரி பால்: முந்திரி பருப்பு & தண்ணீர் சேர்த்து ஒரு கிரீமி பானமாக தயாரிக்கலாம். இதில் குறைந்த கலோரிகளே உள்ளது. இது பசும்பாலுக்குப் பதிலாக தரப்படும் ஒரு சிறந்த பானமாக கருதப்படுகிறது. ஓட்ஸ் பால்: ஓட்ஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து வீட்டிலேயே தயாரிக்கலாம். இருப்பினும் பேக்கேஜ் செய்யப்பட்ட ஓட்ஸ் பாலில், உப்பு, எண்ணெய்கள் போன்றவை சேர்க்கப்பட்டு விரும்பிய சுவையில் கிடைக்கிறது. ஓட்ஸ் பாலும், பசுவின் பாலும் ஒரே மாதிரியான கலோரிகளைக் கொண்டிருக்கின்றன. பாதாம் பால்: அதிக கிரீமியாக இருக்கும் இந்த பாதாம் பால், பசுவின் பாலுக்கு ஒரு சிறந்த மாற்றாகும். இதில் ஆரோக்கியமான மற்றும் unsaturated கொழுப்புகள் உள்ளன. தண்ணீர் மற்றும் பாதாம் பருப்புகளை தூளாக்கி தயாரிக்கப்படுகிறது. இயற்கையாகவே இதில் வைட்டமின்கள் உள்ளது.