
சர்வதேச வானிலை தினம்: இந்த நாளை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
வானிலையியல் (Meteorology) என்பது காலநிலை மற்றும் வானிலை பற்றிய ஆய்வு ஆகும். அத்துடன் நமது வளிமண்டலத்தின் ட்ரோபோஸ்பியர் மற்றும் கீழ் அடுக்கு மண்டலத்தில் உள்ள பல்வேறு நிகழ்வுகள் பற்றிய பகுப்பாய்வாகும்.
உலக வானிலை அமைப்பு (WMO) நிறுவப்பட்டதன் நினைவாக, ஆண்டுதோறும், மார்ச் 23 அன்று உலக வானிலை தினம் கொண்டாடப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள வானிலை ஆய்வின் வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் அமைப்பாக WMO செயல்படுகிறது. மேலும் இந்த அமைப்பு, வானிலை தொடர்பான துறைகள், காலநிலையியல், செயல்பாட்டு நீரியல் மற்றும் அது தொடர்புடைய சுற்றுச்சூழல் சேவைகளின் வளர்ச்சியையும் கவனித்து வருகிறது.
வானிலை
வானிலை தினம் பற்றிய சில தகவல்கள்
மார்ச் 23, 1950 அன்று உலக வானிலை அமைப்பு (WMO) நிறுவப்பட்டது. இது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு நிறுவனம். அதனால், இந்த நாளை 'சர்வதேச வானிலை நாள்', என்று அனுசரிக்கப்படுகிறது.
WMO அமைப்பின் அறிவுறுத்தல் பேரில், மார்ச் 23, 1961 முதல், சர்வதேச வானிலை நாள் கொண்டாடப்படுகிறது.
WMO ஆனது, உலகெங்கிலும் உள்ள நாடுகளில் இருந்து வானிலை பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்ள உருவாக்கப்பட்ட முதல் உலகளாவிய அமைப்பாகும்.
இந்த ஆண்டின், சர்வதேச வானிலை தினத்தின் கருப்பொருள் 'தலைமுறைகள் முழுவதும் வானிலை, காலநிலை மற்றும் நீரின் எதிர்காலம்' என்பதாகும்.
2023, WMO-இன் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.