சர்வதேச முத்த தினம் - முத்தங்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் முத்த தினமானது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக முத்தம் என்றாலே அதனை பலரும் காமத்தில் தான் சேர்க்கிறார்கள். ஆனால் உண்மையில் முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடாகும். முத்தத்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை தெரிந்துக்கொள்ளவே ஆண்டுதோறும் ஜூலை 6ம்தேதி இந்த முத்தத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. முத்தங்களின் வகைகள் மொத்தம் 24 என்று செய்திகள் தெரிவிக்கிறது. அதேபோல் ஒவ்வொரு முத்தத்திற்கும், ஒவ்வொரு அர்த்தம் உள்ளது என்றும் கூறப்படுகிறது. கன்னத்தில் கொடுக்கப்படும் முத்தம் இருவரின் பாசம் மற்றும் நெருக்கத்தினை குறிக்கிறது. அதுவே தற்போது மேற்கத்திய நாடுகளில்'Hello'என கூறுவதன் வடிவாக மாறிவருகிறது. நெற்றியில் முத்தமிடுவது நம்பிக்கைக்கு பேர்போனது. உறவுகள் மீதுள்ள நம்பிக்கை மற்றும் பாதுகாப்பினை வெளிப்படுத்தும் விதமாக இம்முத்தத்தினை காதலர்கள் கொடுக்கிறார்கள்.
கைகளில் முத்தமிடுவது ஐரோப்பியா நாடுகளில் கடைபிடிக்கப்படும் கலாச்சாரம்
கைகளில் முத்தமிடுவது மரியாதையினை குறிக்கும் வகையிலானது. ஐரோப்பியா நாடுகளில் இருந்து தான் இந்த கலாச்சாரம் உருவாகியுள்ளது. மதிப்புமிக்கவர் காதலராக மாறும் பட்சத்தில், மதிப்பினையும், காதலனையும் கலந்த முத்தமாக இது பார்க்கப்படுகிறது. உதடுகளில் பரிமாறப்படும் முத்தமானது ஆழமான காதல் மற்றும் ஈர்ப்பு உள்ளவர்கள் மத்தியில் கொடுக்கப்படுவது. ஒருவரையொருவர் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதனை இந்த முத்தம் மூலம் கூறலாம். காது மடல்களில் கொடுக்கப்படும் முத்தம், காதலர்கள் மற்றும் கணவன்-மனைவி இடையே உணர்ச்சிமிக்க தூண்டலை ஏற்படுத்தும். கழுத்தில் கொடுக்கப்படும் முத்தம் என்பது பாலுணர்வு நோக்கங்களோடு தொடர்புடையது. இது உடல் உறவிற்கு வழிவகுக்கும். மூக்கின் மீது கொடுக்கப்படும் முத்தமானது ஒரு உறவுக்கு இடையில் உள்ள ஆழமான அன்பையும் மதிப்பினையும் வெளிக்கொணரும் வடிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.