Page Loader
உலக செவித்திறன் தினம் 2023: காது கேளாமையை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை வழிகள்
இன்று உலக செவித்திறன் தினம்!

உலக செவித்திறன் தினம் 2023: காது கேளாமையை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை வழிகள்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 03, 2023
10:17 am

செய்தி முன்னோட்டம்

உலகம் முழுவதும், செவித்திறன் மற்றும் செவிப்புலன்களை பராமரிப்பதை ஊக்குவிக்கவும், செவித்திறன் இழப்பை தவிர்க்க நீங்கள் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை வழிகளை பற்றி ஊக்குவிக்க இந்த தினத்தை WHO தேர்ந்தெடுத்து உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், இந்த நாளின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் விதமாக ஒரு தீம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதுபோல, இந்த ஆண்டுக்கான தலைப்பு "அனைவருக்கும் காது மற்றும் செவிப்புலன் பராமரிப்பு!". அந்த தீமின் அடிப்படையில், செவித்திறன் குறைப்படும் அபாயத்தைக் தடுப்பதற்கான சில குறிப்புகள் இதோ: உங்கள் இதயத்தை கவனியுங்கள்: இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இரண்டும், உங்கள் காதுகளின் கேட்கும் திறன்களை தீங்கு விளைவிக்கும். உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் அல்லது இரத்த அழுத்தம் இருந்தால், தகுந்த சிகிச்சை மேற்கொண்டு, அதை கட்டுக்குள் கொண்டுவரவும்.

செவித்திறன்

புகைபிடிப்பதை தவிர்க்கவும்

Ear Plug அல்லது Ear Muff பயன்படுத்துங்கள்: இரைச்சலை தடுக்க, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட Ear-Plug சந்தையில் எளிதாக கிடைக்கும். உங்கள் பணியிடத்தில், நாள் முழுவதும் இரைச்சல் சத்தம் இருந்தால், இவற்றை பயன்படுத்துவதால், செவித்திறன் பாதிப்பை தடுக்கலாம். இல்லையேல், அந்த இரைச்சல் சத்தத்தை விட்டு விலகி சென்று, பணியை தொடரலாம். Noise cancelling ஹெட்செட்டைப் பயன்படுத்தவும்: இவ்வகை ஹெட்செட்டை பயன்படுத்துவதன் மூலம், பின்னணி இரைச்சலை நீக்கி,இசை மற்றும் தொலைபேசி அழைப்புகளை இன்னும் தெளிவாக கேட்க முடியும். அதனால், உங்கள் போன்களின் வால்யூமை குறைத்து பயன்படுத்த முடியும். புகை/மது நிறுத்துங்கள்: அதீத சிகரெட் பயன்பாடு, ஒரு நபரின் செவித்திறனை கணிசமாக பாதிக்கும் என்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இதே போன்ற விளைவுகள், அதிகப்படியான மது அருந்துவதாலும் ஏற்படுகிறது.