உலக ஆஸ்துமா தினம்: ஆஸ்துமா, Bronchitis- இரண்டின் வித்தியாசத்தை அறிந்து கொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
இன்று உலக ஆஸ்துமா தினம். ஆண்டுதோறும், மே மாதம், முதல் செவ்வாய்கிழமை, இந்த சுவாச நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தவே இந்த நாளை தேர்வு செய்துள்ளது மருத்துவ உலகம்.
இந்த தருணத்தில், ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி இரண்டின் வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள். ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி(Bronchitis), இரண்டுமே சுவாச நோய்களாகும். இரண்டிற்கும் ஒரே மாதிரி அறிகுறிகளும் உண்டு.
ஆனால், இரண்டின் தாக்கமும் வேறுவேறாகும். இவற்றிற்கான மருத்துவமுறைகளை தேர்ந்தெடுக்கும் முன்னர், அவற்றின் வேறுபாட்டை அறிந்துகொள்வது அவசியம்.
வைரஸ் அல்லது பாக்டீரியாவால் ஏற்படும் கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி, சில சந்தர்ப்பங்களில் ஆஸ்துமாவாக மாறலாம். அதேபோல, ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மூச்சுக்குழாய் அழற்சி உருவாகும் போது, இது ஆஸ்துமா அறிகுறிகளை மேலும் மோசமாக்கும்.
கார்டு 2
அறிகுறிகளும், காரணிகளும்
மூச்சுக்குழாய் அழற்சி (Bronchitis) பொதுவாக ஒரு தொற்று அல்லது சுற்றுச்சூழல் எரிச்சலால் ஏற்படுகிறது, அதே நேரத்தில் ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட நிலையாகும். இது மூச்சுகாற்று செல்லும் பாதையை வீக்கமடைய வைத்து குறுகியதாக்கி, சுவாசிப்பதை கடினமாக்குகிறது.
மூச்சுக்குழாய் அழற்சியின் அறிகுறிகளில் பொதுவாக இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை இருக்கும். ஆஸ்துமாவில், இவற்றோடு, மார்பு இறுக்கம், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மார்பில் அழுத்தமான உணர்வு ஆகியவை தோன்றும்.
ஆஸ்துமா பல நேரங்களில், தூசி, மகரந்த துகள்கள் மற்றும் புகை போன்ற சுற்றுச்சூழல் காரணிகளாலும், உடற்பயிற்சி, மன அழுத்தம் போன்றவற்றாலும் தூண்டப்படலாம். மாறாக, மூச்சுக்குழாய் அழற்சி பொதுவாக ஒரு வைரஸ் தொற்று, புகை, தூசி அல்லது இரசாயனங்கள் போன்ற சுற்றுச்சூழல் காரணிகளால் மட்டுமே ஏற்படுகிறது.