ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா?
நாளை, ஏப்ரல்-14 , தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. அது எதற்காக எனத்தெரியுமா? சித்திரை மாதத்தின் தொடக்க நாளை, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், புத்தாண்டின் தொடக்கமாக கொண்டாடுகிறார்கள். கிரெகோரியன் காலண்டர்படி, வருடந்தோறும், இந்த நாளே, புதிய வருடத்தின் தொடக்கமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, 'உலகின் மூத்தகுடி' என அழைக்கப்படும், தமிழ் குடியும், தமிழ் மக்கள் வாழ்ந்ததாக சரித்திர ஆய்வுகள் சொல்லும் அனைத்து நாடுகளிலும், நாளையே புத்தாண்டு. அதாவது, தமிழ்நாடு, கேரளா, இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா மற்றும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில், நாளையே புத்தாண்டாக அனுசரிக்கிறார்கள். இந்து மத ஐதீகத்தின் படி, இந்த நாளன்று தான், பிரபஞ்சத்தை உருவாக்க திட்டமிட்டதாகவும், ஆண்டுதோறும், உலக நன்மைக்காக இந்திரன் இந்த நாளில், பூமிக்கு வருகிறார் என நம்பிக்கை.
புத்தாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் தமிழர்கள்?
இந்த புத்தாண்டன்று, காலையில் நீங்கள் பார்க்கும் முதல் நல்ல விஷயம், அந்த ஆண்டு முழுவதும் நடக்கும் என சிலருக்கு நம்பிக்கை உள்ளது. அதனால், ஐஸ்வர்யங்கள் என கருதப்படும், பொன், வெள்ளி, அரிசி, பூ மற்றும் பழங்கள் போன்றவற்றை வைத்து வணங்குவார்கள். வடை, பாயசம், சாம்பார், கூட்டு கரி இதனுடன், மாங்காய் பச்சடியும் சமைத்து உண்ணுவார்கள். இது கோடை காலம் ஆதலால், தற்போது, மா,பலா, வாழை என முக்கனிகளும் கிடைக்கும். இதையும் வைத்து வணங்குவார்கள். தமிழ் புத்தாண்டை கொண்டாடும் வழக்கம் பன்னெடுங்காலமாய் வழக்கத்தில் இருந்து வருகிறது. நக்கீரர் எழுதிய நெடுநல்வாடையிலும், சிலப்பதிகாரத்திலும் இதை பற்றி குறிப்புள்ளது.