அரிசி vs கோதுமை: எடை இழப்பிற்கு சிறந்த உணவு எது
செய்தி முன்னோட்டம்
எடைகுறைப்பிற்கு, உடற்பயிற்சியுடன், உணவுக்கட்டுப்பாடும் அவசியமாகிறது. ஆனால், அந்த உணவு கட்டுப்பாடு அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது. அதை மக்கள் உணர வேண்டும். "அந்த பிரபலம் காலை 2 சப்பாத்தி தான் சாப்பிடுகிறாராம், இந்த நடிகர் தினமும் இரவு 1 இட்லி தான் சாப்பிடுவாராம்" என மற்றவர்களை பார்த்து சூடு வைத்துக்கொள்ள கூடாது.
ஒவ்வொரு உடலுக்கும், தனிப்பட்ட தேவைகள் மற்றும் வெவ்வேறு உணவு முறைகள் பழக்கம் ஆகியிருக்கும். அதை மாற்ற முயற்சிக்கும் போது, ஒவ்வாமை ஏற்படலாம்.
குறைந்த கார்ப் உணவை பின்பற்றுவதன் மூலம், எடையை குறைக்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதேபோல, சிலர் அரிசி சாப்பிடுவதை நிறுத்தினால் எடையை சீக்கிரமாக குறைக்கலாம் எனக்கூறுவர்கள். சிலரோ, சப்பாத்தி சாப்பிடுவதால் அதிகம் கார்போஹைட்ரெட் சேர்கிறது எனவும் கூறுவார்கள்
உடல் எடை
மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள்
உணவியல் நிபுணர் கூற்றுப்படி, அரிசி மற்றும் ரொட்டி, இரண்டுமே ஊட்டச்சத்து மதிப்பில் பெரிய அளவு வித்தியாசமில்லை. எடை இழப்புக்கு இரண்டும் பயனுள்ளதாகவே இருக்கும். வாரத்தில் 4 நாட்கள் சப்பாத்தி சாப்பிட்டால், 2 நாட்களுக்கு சாதம் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
சிறுதானியங்களில் செய்த உணவை சாப்பிடுவதால் உடல் எடை வேகமாக குறையும் எனவும், அது சத்து நிரம்பியது எனவும் கூறுகிறார்கள்.
அதோடு, அரிசியோ அல்லது சப்பாத்தியோ, இரண்டுமே, குறிப்பிட்ட அளவு உட்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் எடை குறைப்பு நிகழும். இருப்பினும், நீரிழிவு நோயாளிகளுக்கு அரிசியை விட ரொட்டி அல்லது ரொட்டி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.