வீட்டில் Vs ஜிம்மில் உடற்பயிற்சி எது சிறந்தது?
செய்தி முன்னோட்டம்
வீட்டில் செய்யப்படும் உடற்பயிற்சிக்கும் ஜிம்மில் செய்யப்படும் உடற்பயிற்சிக்கும் ஒரு சில வித்தியாசங்களே இருக்கும். அவற்றில் எது சிறந்தது மற்றும் நமக்கு பயனளிக்க கூடியது என்பதை இந்த பதிவில் காணலாம்.
உபகரணங்கள்: ஜிம்மிற்குச் சென்றால் நிறைய உபகரணங்களை பயன்படுத்தி உடற்பயிற்சி செய்யலாம். கார்டியோ மெஷின்கள், டிரெட்மில் போன்ற பல மெஷின்களை பயன்படுத்தலாம். ஆனால் அதுவே வீட்டில் பெரும்பாலும் ஒரு சில பொருட்கள் மட்டுமே இருக்கும். அதை மட்டுமே பயன்படுத்த முடியும்.
சௌகரியம்: உங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல், எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உடற்பயிற்சி செய்துகொள்ளலாம். பிஸியான காலங்களில் கூட நேரமிருக்கும் சமயத்தில் உடற்பயிற்சி செய்துகொள்ளலாம். ஜிம்மிற்குச் செல்வதற்கான பயண நேரத்தையும் செலவையும் கூட குறைக்கலாம்.
Work outs in gym
ஜிம்மிற்குச் செல்வதே சிறந்தது
உந்துதல்: ஜிம்மிற்குச் சென்று மற்றவர்களை பார்க்கும் பொழுது உங்களுக்கு ஒரு உந்துதல் உருவாகும். இது கடினமாக உழைக்கவும் உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்தவும் உங்களை ஊக்குவிக்கும். உடற்பயிற்சியைத் தவிர ஜிம்மில் செய்ய வேறு எந்த வேலையும் இருக்காது. வீட்டு வேலைகள், குழந்தைகள் என எந்த தொந்தரவும் இல்லாமல் முழு கவனத்தையும் உடற்பயிற்சியில் செலுத்தலாம்.
தனிப்பட்ட பயிற்சி: பல ஜிம்கள் தனிப்பட்ட பயிற்சி சேவைகளை வழங்குகின்றன, இது புதிதாக வேலை செய்ய விரும்புபவர்களுக்கு அல்லது அவர்களின் உடற்தகுதியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். உங்கள் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் இலக்குகளுக்கு ஏற்றவாறு தனிப்பட்ட பயிற்சியாளர் உங்களுக்கு உதவ முடியும்.