K பியூட்டி இல்லை..இப்போதைய ட்ரெண்ட் J பியூட்டி; அப்படி என்றால் என்ன?
பல வருடங்களாக K-Beauty மீதான தீவிர ஈர்ப்புக்குப் பிறகு, தற்போது சரும பராமரிப்பு ஆர்வலர்கள், J-Beauty, அதாவது ஜப்பானிய அழகால் ஈர்க்கப்பட்டுள்ளனர். உங்களுக்கு சரும பராமரிப்பு பற்றி ஆர்வம் இருந்தால், கண்டிப்பாக கொரிய பொருட்கள் அழகு துறையில் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி அறிந்திருப்பீர்கள். K-Beauty பயன்படுத்தும் அழகு சாதன பொருட்கள், அதன் உயர் தொழில்நுட்ப கருவிகள் மற்றும் விரிவான தோல் பராமரிப்பு நடைமுறைகள் மூலம் கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் பற்றி நம் அனைவரையும் கனவு காண வைத்தது. இப்போது, J-Beauty என்ற புதிய ட்ரெண்ட் பரவி வருகிறது. சமூக ஊடகங்களில் அடுத்த பெரிய விஷயமாக இது மாறி வருவதால், அதை பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய நேரமிது.
J-பியூட்டி எதை உள்ளடக்கியது?
J-பியூட்டி எளிமை மற்றும் செயல்திறனில் அடித்தளமாக கொண்டுள்ளது. குறைந்தபட்ச நடைமுறைகள் மற்றும் உயர்தர தயாரிப்புகள் மூலம் ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தை அடைவதில் கவனம் செலுத்துகிறது. இது பெரும்பாலும், சருமத்தை சரிசெய்தல், சருமத்தின் சமநிலையை பராமரித்தல், நீரேற்றம் மற்றும் சுற்றுச்சூழலின் அழுத்தங்களுக்கு எதிராக பாதுகாப்பதை விட, தடுப்பதை வலியுறுத்துகிறது. இந்த ஜப்பானிய அழகு சாதனங்களில் பயன்படுத்தப்படும் முக்கிய கூறுகள் பச்சை தேயிலை, அரிசி தவிடு மற்றும் கடற்பாசி போன்ற மென்மையான மற்றும் சக்திவாய்ந்த பொருட்கள். அதோடு, இது பச்சை தேயிலை, ஜோஜோபா எண்ணெய், கற்றாழை, கேமிலியா எண்ணெய், அரிசி தவிடு மற்றும் சாக், அதிமதுரம் சாறுகள், ஹைலூரோனிக் அமிலம் போன்ற அதிக இயற்கை பொருட்களைப் பயன்படுத்துகிறது.