ஆதார் கேள்விப்பட்டிருப்பீர்கள்..அதென்ன பால் ஆதார்? அதற்கு எப்படி விண்ணப்பிப்பது?
UIDAI ஆனது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணான ஆதார் அட்டையை வழங்குகிறது. இது பயனரின் பயோமெட்ரிக் மற்றும் தனிப்பட்ட தரவுகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. ஆதார் எண்அரசின் பல்வேறு நோக்கங்களுக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான, அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு தனி நபரும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். இவை அனைத்தும் நீங்கள் அறிந்தவையே. ஆனால், பால் ஆதார் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி என்றால் என்ன மற்றும் அதை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ளுங்கள்
குழந்தைக்கான ஆதார் அட்டை
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைக்ஆதார் அட்டை தான் இந்த பால் ஆதார். பால் ஆதார் அட்டை, வழக்கமான ஆதார் அட்டையைப் போலல்லாமல், நீல நிறத்தில் இருக்கும். இது முற்றிலும் இலவசமாக பெறலாம். இதை பெறுவதற்கு அதிகாரப்பூர்வ ஆதார் பதிவு மையத்திற்கு பதிவு செய்துகொள்ளலாம். அல்லது ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பால் ஆதார் அட்டையைப் பெறுவதற்கு குழந்தையின் பயோமெட்ரிக் தகவலைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. பால் ஆதார் அட்டைக்கு குழந்தையின் புகைப்படம் மற்றும் பிறப்புச் சான்றிதழ் தேவை பால் ஆதார் அட்டைக்காக குழந்தையின் பெற்றோர்கள் தங்களது ஆதார் அட்டைகளில் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். ஒரு குழந்தையின் பயோமெட்ரிக் தகவல்கள் அவருக்கு 5 வயது ஆன பிறகுதான் எடுக்கப்படும்.