
72 மணி நேரம் பழங்களை மட்டும் சாப்பிடுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
செய்தி முன்னோட்டம்
நாம் அனைவரும் உடல் எடையை குறைக்கவே விரும்புவோம்.
அதற்காக டயட், எக்சர்சைஸ், யோகா என பல வித முயற்சிகளை ட்ரை செய்வதுண்டு.
ஆனால், டயட் முறையில் வெறும் பழங்களை மட்டும் உட்கொள்வது பற்றி யோசித்ததுண்டா?
ஒரு வேளை அப்படி செய்தால், உங்களுக்கு தேவையான பலன் கிட்டுமா? அல்லது அது உங்களுக்கு சோர்வையும், உடல்நல கோளாறையும் தருமா?
உதாரணமாக, 72 மணிநேரம் பழங்களை மட்டுமே சாப்பிட்டால், உங்கள் உடலில் எந்நவித மாறுதல்கள் ஏற்படும்? விரிவாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
card 2
பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
ஃப்ரூட் டயட் என்றும் அழைக்கப்படும் 3-நாள் பழ உணவைத் தொடங்குவதன் மூலம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களுடன் உங்கள் உடலை மேம்படுத்துவற்கான ஒரு நம்பிக்கைக்குரிய வழியாகத் தோன்றலாம்.
12 மணி நேரம் கழித்து, நீங்கள் மேம்பட்ட செரிமானத்தை அனுபவிப்பீர்கள்.
உங்கள் உடல், பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்களை ஜீரணித்து உறிஞ்சத் தொடங்கும். அதிலுள்ள நார்ச்சத்து வீக்கத்தைக் குறைத்து வயிற்று வலியைக் குறைக்கும்.
24 மணி நேரத்திற்குப் பிறகு, உங்கள் உடல், கெட்ட கொழுப்புகள் எரிக்கத் தொடங்கும் உங்கள் உடல் ஊட்டச்சத்து, கெட்டோசிஸின் நிலைக்குச் செல்லும். அதாவது சேமிக்கப்பட்ட கொழுப்புகளை ஆற்றல் மூலமாகப் பயன்படுத்தத் தொடங்கும்.
பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. அவை செரிமானத்தை மேம்படுத்தவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கவும் பங்களிக்கின்றன.
card 3
உடலில் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகள்
வெறும் பழங்கள் மட்டுமே உட்கொள்ளும் போது, புரதம், கொழுப்பு மற்றும் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் போகலாம்.
அதனால் ஹார்மோன் உற்பத்தி உட்பட பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு தேவைப்படும் கொழுப்புகள் இல்லாமல் போகும்போது, தசை இழப்பு, சோர்வு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.
கூடுதலாக, பழங்களில் அதிக இயற்கையான சர்க்கரை இருப்பதால், பழங்களை மட்டுமே உண்ணும்போது இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படக்கூடும்.
ஜங்க் ஃபூட்களுக்கு ஆரோக்கியமான மாற்றாக இருந்தாலும், அதிகப்படியான பழங்கள், குறிப்பாக 3 வேளையும் உண்ணுவதால், அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகளுக்கு பங்களித்து, எடை இழப்பு முயற்சிகள் பலனளிக்காமல் போகலாம்.