உங்கள் உறவை முறித்துக்கொள்ள முடிவெடுத்துவிட்டீர்களா? அதற்கு உங்களுக்கு உதவ சில வழிகள்
ஒரு உறவில், முறிவு என்பது கடினமான மற்றும் வேதனையான விஷயமாகும். உங்கள் துணையின், உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என நினைப்பவர்களா நீங்கள்? பிரச்னையின்றி, சுமூகமாக பிரேக் அப் செய்யவேண்டும் என்ற எண்ணமா? அல்லது, இது போன்ற சூழ்நிலையில், உங்கள் துணையை எதிர்கொள்ளும் தர்மசங்கடமான சூழலை தவிர்க்க எண்ணமா? இதோ அதற்கான சில வழிகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. நேருக்கு நேர் உரையாடல்: ஒருவருடன் பிரேக்-அப் செய்ததை கூறுவதற்கு, நேரில் கூறுவது தான் சிறந்த வழி. எவ்வித கவனச்சிதறலும் இல்லாமல், அமைதியான மற்றும் தனிப்பட்ட இடத்தைத் தேர்ந்தெடுத்து, பேசுங்கள். நீங்கள் ஏன் உறவை முறித்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என்பதில் நேர்மையாக இருங்கள், ஆனால் உங்கள் கூட்டாளியின் உணர்வுகளுக்கும், மரியாதை மற்றும் அக்கறை காட்ட வேண்டும்.
பிரியும் போது, உங்கள் துணையின் உணர்ச்சிகளுக்கும் மதிப்பளியுங்கள்
வீடியோ அழைப்பு: நேரில் உரையாடுவது சாத்தியமில்லை என்றால், வீடியோ அழைப்பை பயன்படுத்தலாம். தொலைபேசி அழைப்பு: வீடியோ அழைப்பு சாத்தியமில்லை என உணர்ந்தால், தொலைபேசி அழைப்பைக் தேர்வு செய்யுங்கள். உங்கள் இருவருக்கும், பொருத்தமான மற்றும் குறுக்கீடுகள் இல்லாத நேரத்தை முன்னரே தேர்வு செய்து கொள்ளுங்கள். கடிதம் அல்லது மின்னஞ்சல்: உங்கள் உணர்வுகளை நேரில் வெளிப்படுத்துவது கடினமாக உணர்ந்தால், கடிதம் அல்லது மின்னஞ்சலை தேர்வு செய்யலாம். உங்கள் துணையை அணுகுமுன்னர், உங்கள் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என நினைத்தால், கடிதம் சிறந்த தேர்வாக இருக்கும். பரஸ்பர உடன்படிக்கை: சில நேரங்களில், உறவில் இருக்கும் இருவரும் ஒருமனதாக, பிரேக்-அப் செய்துவிட முடிவு செய்து இருக்கலாம். அப்போது, உறவை முடிவுக்குக் கொண்டுவர நீங்கள் பரஸ்பர உடன்படிக்கைக்கு வரலாம்.