இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? இந்த மூன்று வழிமுறைகளை பின்பற்றுங்கள்
சிறந்த ஆரோக்கியத்திற்கு நல்ல தூக்கம் மிகவும் முக்கியம். ஒரு நல்ல இரவு தூக்கம் என்பது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, சிந்திக்கவும் செயல்படவும் உதவும். ஆனால், பல காரணங்கள் இரவு தூக்கத்தை பாதிக்கின்றன. ஒரு வசதியான படுக்கையும், அறையின் வெப்பநிலையும் நல்ல இரவு தூக்கத்திற்கு அவசியம். பின்வரும் மூன்று அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம். 4-7-8 பயிற்சி செய்யுங்கள்: தூங்கும் நேரத்திற்கு முன் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்ளவும். 4-7-8 போன்ற மூச்சுப் பயிற்சிகள் மன அழுத்தத்தை குறைத்து மனதை சாந்தமாக்கும். இந்த மூச்சுப் பயிற்சியை உங்கள் தூக்க முறையில் சேர்த்தால், ஆழ்ந்த தூக்கம் கிடைக்க உதவும்.
நல்ல தூக்கத்திற்கான வழிமுறைகள்
தூங்கும் நேரத்தை மாற்றாமல் தொடருங்கள்: விடுமுறையிலும் தூங்கும் மற்றும் விழிக்கும் நேரத்தை மாற்ற வேண்டாம். நமது உடல் சர்க்காடியன் ரிதம் என்ற 24 மணி நேர இயற்கை சுற்றுப்பாதையை அடிப்படையாகக் கொண்டது. இது ஒளி மற்றும் இருளால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு வழக்கமான நேரத்தில் தூங்கி, விழித்தால் இந்த உட்படிகாரம் சரியாக செயல்படும். தூங்கும் நேரத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு கேட்ஜெட்களை அணைத்துவிடுங்கள்: ஸ்மார்ட்போன், டேப்லெட், கம்ப்யூட்டர் போன்ற கருவிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளி, மெலட்டோனின் ஹார்மோன் உற்பத்தியை பாதிக்கக்கூடும். இந்த ஹார்மோன் நம் தூக்கத்தை கட்டுப்படுத்துகிறது. தூங்கும் நேரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு முன்பு மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம்.