LOADING...
ஆய்வு கட்டுரை வடிவமைப்பில் திருமண அழைப்பிதழ் - இணையத்தில் வைரல் 
ஆய்வு கட்டுரை வடிவமைப்பில் திருமண அழைப்பிதழ் - இணையத்தில் வைரல்

ஆய்வு கட்டுரை வடிவமைப்பில் திருமண அழைப்பிதழ் - இணையத்தில் வைரல் 

எழுதியவர் Nivetha P
Nov 28, 2023
09:03 pm

செய்தி முன்னோட்டம்

சமீப காலங்களில் ஒரு திருமணம் நடைபெறுகிறது என்றாலே அதில் என்னென்ன புதுமைகளை செய்து அசத்தலாம் என்னும் நோக்கில் தான் ஒவ்வொரு ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது. இதனுள் முக்கியமானது திருமண அழைப்பிதழ். வித்தியாசமான முறையில் திருமண அழைப்பிதழ்களை அச்சடித்து பலரையும் ஆச்சர்யமடைய செய்கின்றனர். அதன்படி வங்கதேசத்தை சேர்ந்த சஞ்சனா தபசும் சினேகா மற்றும் மஹ்ஜீப் இமோன் தம்பதி தங்கள் திருமண அழைப்பிதழை ஓர் ஆய்வு கட்டுரை போல் வடிவமைத்துள்ளனர். இவர்களின் திருமணம் கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி நிறைவடைந்த நிலையில், இவர்களது திருமண அழைப்பிதழ் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது. இதில் திருமணம் குறித்த தகவல்கள் மட்டுமின்றி அதன் முக்கியத்துவங்கள் குறித்தும் எழுதப்பட்டுள்ளது. அதே போல் தம்பதிகள் முதன்முதலில் சந்தித்துக்கொண்ட விவரங்கள் குறித்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

திருமண அழைப்பிதழ்