
பார்ப்பதற்கு பீட்சா போலவே இருக்கும் சூப்பர் மெனு கார்டு: வைரலாகும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
பொதுவாக ஒரு உணவகத்தில், அங்கு பரிமாறப்படும் உணவு வகைகளும், அதன் விலை பட்டியலும் தான் இடம்பெற்றிருக்கும்.
ஆனால், நீங்கள் சாப்பிடும் உணவு, பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என தெரிந்தால், அது உங்கள் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
அதற்கு தான், அழகாக உணவு பரிமாறுவதற்கு என ஒரு நிபுணரை ஸ்டார் ஹோட்டல்களில் நியமித்திருப்பார்கள்.
புதியதாக ஒரு உணவு ஆர்டர் செய்யும் போது, அது பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என தெரிந்தால் பரவாயில்லையே என ஆதங்கப்பட்டவர்களுக்காக, ஒரு பீட்சா கடை, சூப்பர் மெனு கார்டு-ஐ உருவாக்கி உள்ளது.
உங்கள் பீட்சாவின் தோற்றத்தை அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், அந்த பீட்சாவில் என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சூப்பர் மெனு கார்டு
The perfect pizza menu doesn’t exi… https://t.co/PrAZQ4iEnG pic.twitter.com/ypLJFVTHFV
— Thijs Niks (@thijsniks) April 20, 2023