ப்ரோபோசல் டே: உங்கள் காதல் ப்ரோபோசலுக்கு உடனே ஒகே சொல்ல வைக்க, சில டிப்ஸ்!
ஒரு சர்ப்ரைஸ் திட்டத்தைத் திட்டமிடுவது என்பது உற்சாகம், எதிர்பார்ப்பு என பலவித உணர்வுகளை தரும். அதிலும் குறிப்பாக உங்களுக்கு பிரியமானவர்களுக்கு நீங்கள் திட்டமிடும் சர்ப்ரைஸ் பிளான் கூடுதல் சுவாரசியம் தான். அவர்களுக்கு பிடித்தமான பரிசு, பூக்கள் என சர்ப்ரைஸாக தந்து அவர்களை ஆச்சரியப்படுத்த பலவிதமான திட்ட ஐடியாக்கள் உண்டு. இந்த நிலையில், இன்று பிப்ரவரி 8 ஆம் தேதி, வாலெண்டைன் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, ப்ரோபோசல் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், உங்கள் காதலுக்கு முதல் படியான ப்ரோபோசல்-ஐ சர்ப்ரைஸாக திட்டமிடுங்கள். நீங்கள் செய்யும் அந்த அழகிய ப்ரோபோசலை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள செய்வது எப்படி என்பதற்கான டிப்ஸ் இதோ!
ப்ரோபோசல் செய்ய சில ஐடியாக்கள்
மோதிரம்: ப்ரோபோசலில் மோதிரம் என்பது ஒரு முக்கியமான படியாகும். உங்கள் பார்ட்னரின் ரசனைக்கு ஏற்ப அழகிய மோதிரத்தை சர்ப்ரைஸாக அணிவித்து, உங்கள் காதலை ப்ரொபோஸ் செய்யுங்கள் இடம்: உங்கள் காதலை ப்ரொபோஸ் செய்ய நீங்கள் தேர்வு செய்யும் இடமும் முக்கியமாகும். அந்த இடம் உங்கள் இருவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்தால் கூடுதல் சுவாரசியம். நீங்கள் முதலில் சந்தித்த இடம், நீங்க முதலில் டேட்டிற்கு சென்ற இடம், உங்கள் பார்ட்னர் நீண்ட நாட்களாக போகவேண்டும் என எண்ணிய இடம் போன்ற இடங்களை தேர்வு செய்து, ப்ரொபோஸ் செய்யலாம். பேச்சு: ப்ரபோசல் செய்யும் போது, நீங்கள் தரவிருக்கும் ஸ்பீச் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் காதலை அழகிய வார்த்தைகளில் வெளிக்கொணருங்கள்.