வாலெண்டைன் வாரம்: இன்று ஹக் டே- அதன் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
வரும் பிப்ரவரி 14ஆம் தேதி, காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது.
அதற்கு முன்னதாக ஒரு வாரம் இந்த காதலர் தினத்திற்கு கூடுதல் சுவாரசியம் சேர்க்கும் விதமாக பல தினங்கள் கொடாடப்படுகின்றன.
வாலண்டைன் வாரத்தில், ரோஸ் டே துவங்கி ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே போன்றவை கொண்டாடப்படுகிறது.
அதில், இன்று பிப்ரவரி 12ஆம் தேதி ஹக் டேவாக கொண்டாடப்படுகிறது.
பலவகையான அரவணைப்புகளும், அதற்கென சில அர்த்தங்களும் உண்டென்றும் உங்களுக்கு தெரியுமா?
ஒரு ஆராய்ச்சிபடி, பெரும்பாலான மக்கள் வலது பக்க அரவணைப்புகளுக்கு அதிக விருப்பம் காட்டுகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வலது கைப் பழக்கம் உள்ளவர்கள் பொதுவாக வலது பக்கத்திலிருந்து கட்டிப்பிடிக்க முனைகிறார்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹக் டே
கட்டிப்புடி வைத்தியத்தின் நன்மைகள்
மன அழுத்தம் குறையும்: நாம் கட்டிப்பிடிக்கும்போது, மூளையில் ஒருவித ஹார்மோன் சுரக்கிறது. அது தாய்வழி பராமரிப்புடன் தொடர்புடைய பகுதிகளை தூண்டுகிறது.
அதனால் மனதிற்குள் எழும் அழுத்தம் குறைந்து, மனம் அமைதியடைகிறது.
நோய்க்கு எதிரான பாதுகாப்பு: கட்டிப்புடி வைத்தியம், உண்மையாகவே எண்ணற்ற நோய்களுக்கு எதிரான ஒரு வலுவான கவசம். ஆய்வுகளில், அடிக்கடி கட்டிப்பிடிப்பதற்கும் வலுவூட்டப்பட்ட நோயெதிர்ப்பு அமைப்புக்கும் இடையே ஒரு கட்டாயத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது: அறிவியல் ஆராய்ச்சிகள் கட்டிப்பிடிப்பதன்னால் இருதய நன்மைகளை ஏற்படுகிறது என கண்டறிந்துள்ளன. ஏனெனில் இது இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை சீராக்க உதவுகிறது.