Page Loader
மஞ்சள் அதிகமாக உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு வருமா? இதைத் தெரிந்து கொள்ளுங்கள்
மஞ்சள் அதிகமாக உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு வருமா?

மஞ்சள் அதிகமாக உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு வருமா? இதைத் தெரிந்து கொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 13, 2025
07:47 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் 57 வயது பெண் கேட்டி மோகன் என்பவர் சமீபத்தில் கடுமையான கல்லீரல் நச்சுத்தன்மையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தினமும் மஞ்சள் சப்ளிமெண்ட்ஸ் உட்கொண்டதால் அவரது கல்லீரல் நொதி அளவுகள் சாதாரண வரம்பை விட 60 மடங்கு உயர்ந்தன. என்பிசி செய்திகளின்படி, மூட்டு வலி நிவாரணம் மற்றும் வீக்கத்திற்கு பரிந்துரைக்கும் இன்ஸ்டாகிராம் வீடியோவைப் பார்த்த பிறகு, மார்ச் மாதத்தில் கேட்டி மோகன் மஞ்சள் மாத்திரைகளை எடுக்கத் தொடங்கினார். சில வாரங்களுக்குள், கேட்டி மோகன் தொடர்ந்து வயிற்று வலி, குமட்டல், சோர்வு மற்றும் வழக்கத்திற்கு மாறாக கருமையான சிறுநீர் உள்ளிட்ட தொந்தரவான அறிகுறிகளை அனுபவித்தார்.

கல்லீரல் பாதிப்பு

கல்லீரல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி 

மஞ்சள் மூலிகை சப்ளிமெண்ட்ஸுடன் தொடர்புடைய கல்லீரல் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்த அறிக்கையால் பீதியடைந்த அவர் அவசர மருத்துவ உதவியை நாடினார். இரத்த பரிசோதனைகளில் ஆபத்தான அளவில் உயர்ந்த கல்லீரல் நொதிகள் இருப்பது கண்டறியப்பட்டது, மேலும் அவர் நியூயார்க் நகரில் உள்ள NYU லாங்கோனுக்கு மாற்றப்படுவதற்கு முன்பு உள்ளூர் நியூ ஜெர்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். NYU இன் ஹெபடாலஜிஸ்ட் டாக்டர் நிகோலாஸ் பைர்சோபௌலோஸ், கேட்டி மோகன் கடுமையான கல்லீரல் செயலிழப்பின் விளிம்பில் இருப்பதை உறுதிப்படுத்தினார். மருத்துவமனையில் ஆறு நாட்கள் நெருக்கமான கண்காணிப்பில் இருந்த அவர், அறுவை சிகிச்சை இல்லாமல் அவரது கல்லீரலை மீட்டெடுக்க உதவிய ஐவி சிகிச்சைகளைப் பெற்றார்.

மஞ்சள்

மஞ்சளின் நோய் எதிர்ப்புத் தன்மை

மஞ்சள் அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் செரிமான நன்மைகளுக்கு பரவலாக அறியப்பட்டாலும், அதிகப்படியான அல்லது கட்டுப்பாடற்ற பயன்பாடு கடுமையான உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உலக சுகாதார நிறுவனம் தினமும் ஒரு கிலோ உடல் எடைக்கு அதிகபட்சமாக 0-3 மி.கி மஞ்சள் பரிந்துரைக்கிறது. அதிகமாகப் பயன்படுத்துவது செரிமான பிரச்சினைகள், சிறுநீரக கல் ஆபத்து அதிகரிப்பு, அதிகப்படியான இரத்தம் மெலிதல் மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில், கல்லீரல் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும்.