உலக புற்றுநோய் தினம்: இந்தியாவில் காணப்படும் புற்றுநோயின் வகைகள்
சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (UICC) தலைமையில், ஆண்டுதோறும், பிப்ரவரி 4 அன்று, உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோயை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், இந்த நாளை தேர்ந்தெடுத்துள்ளனர். புற்றுநோய்கள் பற்றிய அறிகுறிகளும், அதன் வகைகளை பற்றியும் மக்கள் அறிந்திருந்தால், ஆரம்ப கட்டங்களிலேயே புற்றுநோயை குணமாக்கலாம், இறப்பை தவிர்க்கலாம். இந்தியாவில் பரவலாக காணப்படும் புற்றுநோய்களும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் விகிதாச்சாரமும் இங்கே: மார்பக புற்றுநோய்: பெண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோய் இது. இதுவரை, இந்திய மக்கள் தொகையில் 13.51 சதவிகிதம் இந்த மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும். குறிப்பாக, இந்திய பெண்கள் மக்கள்தொகையில் 26.3 சதவீதம் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.
மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக பெண்களை தாக்கும் கர்ப்பப்பை புற்றுநோய்
கர்ப்பப்பை புற்றுநோய்: இவ்வகை புற்றுநோயால், 2020 ஆம் ஆண்டில் மட்டும் 1,23,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இந்திய பெண்கள் மக்கள்தொகையில், 18.3 சதவிகிதம் உள்ளதாகவும், மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக அதிகமான பாதிப்பை உண்டாக்குகிறது என்றும் கூறப்படுகிறது. நுரையீரல் புற்றுநோய்: இந்திய மக்களில் அதிகம் கண்டறியப்பட்ட கேன்சர்களில் இவ்வகை கேன்சருக்கு இரண்டாவது இடம். இந்தியாவின், ஆண்கள் தொகையில் 8%, பெண்கள் தொகையில் 3.1 % பாதிக்கப்பட்டுள்ளனர். உதடு மற்றும் வாய் புற்றுநோய்: 10.3% நோயாளிகள் இந்த கேன்சர் வகையில் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், அவர்களில் 16% க்கு மேல் ஆண்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. பெருங்குடல்: இந்திய புற்றுநோயாளிகளில் 4.9 சதவிகிதம் இந்த கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் தான். ஆண்கள் 6.3%, பெண்கள் 3.7% பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.