Page Loader
சுற்றுலா: இலங்கையின் அனுராதபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சில இடங்கள்
அனுராதபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சில இடங்கள்

சுற்றுலா: இலங்கையின் அனுராதபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சில இடங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 11, 2023
05:03 pm

செய்தி முன்னோட்டம்

இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் தலைநகரமும், இலங்கையின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றான இந்த அனுராதபுரத்தில், நீங்கள் காணவேண்டிய பாரம்பரிய வரலாற்று சின்னங்கள் ஏராளம் உண்டு. அவற்றின் பட்டியல் இதோ: அனுராதபுரத்தின் புராதன கட்டடங்கள்: கிமு.4-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இந்த நகரம், சில குறிப்பிடத்தக்க நினைவுச்சின்னங்களைக் கொண்டுள்ளது. புத்தர் ஞானம் பெற்ற அசல் போ மரத்தின், நேரடி மரக்கன்று என்று நம்பப்படும், ஸ்ரீ மஹா போதி மரத்திலிருந்து, உலகின் பழமையான ஸ்தூபியான ருவன்வெலிசாய டகோபா வரை பல புராதன சின்னங்கள் உண்டு. புனிதமான போ மரம்: கிமு.3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த போ மரம், உலகின் மிகப் பழமையான மரமாகக் கருதப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக இந்த புனித மரத்தை, பௌத்தர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

சுற்றுலா

அழகிய திஸ்ஸ வெவ ஏரியில் படகு சவாரி செய்யலாம்

பண்டைய நகர சுவர்கள்: அனுராதபுரத்தை சுற்றி, பண்டைய கால சுவர் சிதிலங்கள் உண்டு. கிமு.,3-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பாதுகாப்பு மற்றும் மத நோக்கங்களுக்காக கட்டப்பட்ட சுவர், ஒரு காலத்தில் அகழியால் சூழப்பட்டிருந்தது. புனிதமான திஸ்ஸ வெவ ஏரி: நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புனிதமான திஸ்ஸ வெவா ஏரி, பார்வையாளர்களை வசீகரிக்கும். பசுமையான சூழலில் படகு சவாரியும் செய்யலாம். மேலும், அருகிலுள்ள திஸ்ஸமஹாராம பாறையில் உள்ள பழமையான கோவிலையும் கண்டு வரலாம். பழமையான கோவில்கள் மற்றும் ஸ்தூபிகள்: அனுராதபுரத்தில் உள்ள அபயகிரி ஸ்தூபி, ஒரு பௌத்த மடம், குட்டம் போகுனா, இரு அரச குளியல் குளங்கள், ருவன்வெளிசேய டகோபா, மற்றும் துடுகமுனு மன்னரால் கட்டப்பட்ட ஸ்தூபி போன்ற பழங்காலத்தின் சாட்சிகளை கண்டு வரலாம்.