ஷெங்கன் விசா பெறுவதற்கு எளிமையான நடைமுறைகளை பின்பற்றும் சில நாடுகள்
ஷெங்கன் விசா என்பது ஒரு வகையான சுற்றுலா விசா ஆகும். இது சைப்ரஸ் மற்றும் அயர்லாந்தைத் தவிர ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கிறது. ஆண்டுதோறும், ஷெங்கன் நாடுகள் மில்லியன் கணக்கான விசா விண்ணப்பங்களைப் பெறுகின்றன. எனவே, உங்கள் ஷெங்கன் விசா நிராகரிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளது. எனினும், புள்ளிவிவர கணக்குப்படி, விசா நிராகரிப்பில், குறைந்த அளவான சாத்திய புள்ளிகள் பெற்றுள்ள நாடுகளின் பட்டியல் இதோ: லிதுவேனியா: 2021 தரவுகளின்படி, லிதுவேனியா 98.7% வெற்றி விகிதத்துடன், ஐரோப்பாவில் அதிக விசா-அனுமதி விகிதங்களைக் கொண்டுள்ளது. விமான நிலைய போக்குவரத்து விசாக்கள், பல்நுழைவு விசாக்கள் மற்றும் நீண்ட கால விசாக்கள் உட்பட மொத்தம் 3,481 விண்ணப்பங்களில் இருந்து 3,090 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
எளிதாக ஷெங்கன் விசா வழங்கும் நாடுகள்
எஸ்டோனியா: இந்த நாடு, விரைவான விசா செயலாக்க நேரத்தை கடைப்பிடிக்கிறது. பெரும்பாலான விண்ணப்பங்கள் 15 நாட்களுக்குள் செயலாக்கப்படும். மேலும்,இந்நாட்டில் 98.4% வீசா அனுமதி விகிதம் உள்ளது. 2021 -இல், மொத்தம் 40,657 விண்ணப்பதாரர்களில், 38,389 பேருக்கு, எஸ்டோனிய விசா வழங்கப்பட்டது. பின்லாந்து: 2021 -இல் பெறப்பட்ட 61,018 விசா விண்ணப்பங்களில், 55,882 விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டது. அதோடு, பின்லாந்தில் ஷெங்கன் விசாவிற்கான செயலாக்க நேரம், சுமார் 15 நாட்கள் ஆகும். குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை பல நுழைவு விசாக்களையும் வழங்குகிறது. ஸ்லோவாக்கியா: அதிகமாக விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாத நாடு என்பதால், உங்கள் விசா நிராகரிப்பு விகிதமும் குறைவு தான். சென்ற ஆண்டு, இந்நாட்டிற்கு பெறப்பட்ட 3,886 விண்ணப்பங்களில் 3,806 விசாக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.