ஷெங்கன் விசா பெறுவதற்கு கடினமான நடைமுறைகளை பின்பற்றும் 5 நாடுகள்
ஷெங்கன் விசா என்பது ஒரு வகையான சுற்றுலா விசா ஆகும். இது சைப்ரஸ் மற்றும் அயர்லாந்தைத் தவிர ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கிறது. இருப்பினும், ஒவ்வொரு நாட்டிற்கும், ஷெங்கன் விசா வழங்குவதற்கான தனி நடைமுறைகள் உள்ளன. ஒருசில ஐரோப்பிய நாடுகள் மற்றவர்களை விட மிகவும் விசா விஷயத்தில் கண்டிப்பானவை என்று அறியப்படுகிறது. அப்படி கடுமையான ஷெங்கன் விசா முறைகளைக் கொண்ட 5 நாடுகள்: ஸ்வீடன்: ஸ்வீடனுக்கு ஷெங்கன் விசா பெற பல நடைமுறைகள் உண்டு. குறிப்பாக ஆவணங்கள் மற்றும் நிதி சம்மந்தப்பட்ட ஆதாரங்கள் முக்கியமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும், 30% ஷெங்கன் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது. ஷெங்கன் விசா துஷ்பிரயோகத்தை தடுக்கவே இத்தகைய கடுமையான விதிமுறைகள் என கூறுகின்றனர்.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பாதுகாப்பு காரணமாக விசாவை மறுக்கும் நாடுகள்
நார்வே: விசா விண்ணப்பங்களைச் ஆராயும்போது, வருகையின் நோக்கம், தங்கியிருக்கும் காலம், நிதி போன்ற பல்வேறு காரணிகளை, நார்வே கருத்தில் கொள்கிறது. 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, 9,895 விசா விண்ணப்பங்களில், 26.2% நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ்: சட்டவிரோத குடியேற்றம் பற்றிய கவலைகள் காரணமாக, ஷெங்கன் விசா வழங்குவதில் பிரான்ஸ் கடுமை காட்டுவதாக கூறுகிறது. 2021 தரவுகளின்படி, 652,331 விண்ணப்பங்களில் 21.1% நிராகரித்தது. டென்மார்க்: அதிக குடியேற்ற விகிதங்கள் மற்றும் பாதுகாப்பு கவலைகள் காரணமாக, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு, விசா விண்ணப்பம் கடினமாக இருக்கும். 2021 தரவுகளின்படி, 26,469 விண்ணப்பங்களில் 21.1% நிராகரிக்கப்பட்டது. பெல்ஜியம்:50,796 விண்ணப்பங்களில் 20.4% விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது.மத்திய கிழக்கு,வட ஆபிரிக்காவில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா கிடைப்பது கடினம்.