தேசிய கைத்தறி தினம் இன்று அனுசரிப்பு
செய்தி முன்னோட்டம்
கைத்தறித்தொழில் பலநூறு ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ளது என்று கூறப்படுகிறது.
அந்த காலத்தில் இந்திய பாரம்பரியம் கைத்தறியின் கலைநயம் கொண்டு பிரதிபலிக்கப்பட்டது.
ஆனால் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் தயார் செய்த ஆடைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ததால் நமது நாட்டின் கைத்தறித்தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது.
மேலும் இந்த ஆடைகள் இறக்குமதி காரணமாக இந்திய நெசவாளர்களுக்கு வேலையில்லாமல் போனது,அச்சமயத்தில் தான் 1905ம்ஆண்டு ஆகஸ்ட் 7ம்தேதி இந்திய சுதந்திரப்போராட்டத்தின் ஒருபகுதியாக 'சுதேசி இயக்கம்' துவக்கப்பட்டது.
இந்த இயக்கத்தின் நோக்கம் யாதெனில், மக்களுக்கு இந்த இறக்குமதி மீதான நம்பிக்கையினை போக்கி, உள்நாட்டு தயாரிப்பினை மேம்படுத்துவதே ஆகும்.
இந்த முயற்சியின் ஒரு பங்களிப்பாகவே ஒவ்வொரு வீட்டிலும் 'காதி' என்னும் கைத்தறி உடைகளை தயாரிக்க துவங்கியுள்ளனர்.
கைத்தறி
கைத்தறி நெசவாளர்களுள் 70%க்கும் அதிகமானோர் பெண்கள்
இதன் விளைவாக, இந்தியாகேட் அருகேயுள்ள இளவரசி பூங்காவில் 'நள்ளிரவு நேரத்தில்' ஜவஹர்லால் நேரு காதியால் நெய்யப்பட்ட இந்திய நாட்டின் தேசியக்கொடியினை ஏற்றினார்.
சுதேசி இயக்கம் ஆகஸ்ட் 7ம்தேதி நிறுவப்பட்டதால் அன்றையத்தினம் தேசிய கைத்தறித்தினமாக அங்கீகரிக்கப்பட்டது.
அதன்படி கடந்த 2015ம்ஆண்டு ஆகஸ்ட் 7ம்தேதி முதல் இந்த தேசிய கைத்தறித்தினம் சென்னையில் இந்திய அரசால் துவங்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
அதிலிருந்தே ஒவ்வொரு ஆண்டும் இன்றையத்தினம் தேசிய கைத்தறித்தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவின் சமூகப்பொருளாதார முன்னேற்றத்தின் ஓர்அங்கமாக கைத்தறித்துறை இருக்கிறது என்பதற்கான விழிப்புணர்வாகவே இத்தினத்தினை மத்திய ஜவுளி அமைச்சகம் கொண்டாடுகிறது.
கைத்தறி நெசவாளர்கள் மற்றும் அதன் தொடர்புடையப்பணிகளில் 70%க்கும் அதிகமானோர் பெண்கள்.
அதனால் பெண்கள் நலம் கருதியும், அவர்களை மேம்படுத்தி நன்றித்தெரிவிக்கவும் இந்நாள் நல்வாய்ப்பாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.