இன்று முட்டாள்கள் தினம்; அது ஏன் என தெரியுமா?
ஏப்ரல் 1 என்றாலே, முட்டாள்கள் தினம் என உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். பல வேடிக்கையான வழிகளில், நண்பர்களையும், குடும்பத்தாரையும் முட்டாளாக்கி மகிழ்வார்கள். ஆனால், அவை அனைத்தும் ஆரோக்கியமான வழிகளில் தான் என்பதும் முக்கியம் இப்போது பரவி வரும் பிராங்க் கலாச்சாரத்தின் ஆரம்ப புள்ளி இந்த முட்டாள்கள் தின கொண்டாட்டம் எனக்கூறலாம். ஆனால் ஏப்ரல் fools Day என இந்த நாளில் ஏன் கொண்டாடப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அதன் பின்னணி என்ன என தெரிந்து கொள்ள, தொடர்ந்து படியுங்கள். சரித்திர ஆராய்ச்சிகளின் படி, 200 ஆண்டுகளுக்கும் மேலாக, UK-வில் இந்த நாளை அனுசரித்து வருகின்றனர்.
உலகம் எங்கும் கொண்டாடப்படும் இந்த நாளின் பின்னணி என்ன?
Fools Day பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, 16 ஆம் நூற்றாண்டில், போப் கிரிகோரி XIII என்பவர், 'கிரிகோரியன் காலெண்டர்'-ஐ நடைமுறைக்கு கொண்டு வந்தார். அந்த காலெண்டரில் வருடத்தின் தொடக்க நாளாக, ஜனவரி 1 குறிப்பிடபட்டிருந்தது. அது வரை, ஏப்ரல் 1 தான், புதிய ஆண்டின் தொடக்கமாக அனுசரிக்கப்பட்டு வந்தது. புதிய கிரிகோரியன் காலெண்டர் வந்தாலும், சிலர் ஏப்ரல் மாதத்தை தான், ஆண்டின் தொடக்கமாக கடைபிடித்தனர். அவர்களை குறிக்கும் வகையில், 'ஏப்ரல் 1 ', முட்டாள்கள் தினம் என கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளில், முட்டாள்கள் தினம் வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. பிரான்சில், முட்டாளாக்கப்பட்ட நபரை பாய்சன் டி'அவ்ரில் அல்லது ஏப்ரல் மீன் என்று அழைக்கப்படுகிறார். அதாவது சிறிய மீன், எளிதில் பிடிபடும் என்று அர்த்தம்.