ஒர்க்-லைப் பாலன்ஸ் செய்ய கடினமாக உள்ளதா? அதை சமாளிக்க நிபுணர்கள் தரும் சில குறிப்புகள்
பலருக்கும், ஒர்க்-லைப் பேலன்ஸ் செய்வது பலருக்கும் கடினமாக தோன்றலாம். தற்போது இருக்கும் பரபரப்பான வாழ்க்கை சூழலில், வேலைக்கு முக்கியத்துவம் அளித்து, வாழ்க்கையில் முன்னேறுவதா அல்லது, தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சிறிது நேரம் ஒதுக்கி வாழ்க்கையை அனுபவிப்பதை என பலருக்கும் குழப்பமான நிலை வரலாம். இந்த சிக்கலை சமாளிக்க, நிபுணர்கள் சில குறிப்புகளை தருகிறார்கள். நேர மேலாண்மை: சரியாக சிந்தித்து, உங்கள் வேலையின் தேவைகளுக்கு ஏற்ப, உங்கள் செயல்பாடுகளை திட்டமிட சில நிமிடங்களை எடுத்துக் கொண்டால், அது வாழ்க்கையை எளிதாக்கும். குறிப்பாக, WFH என்ற தொழில்முறை வந்தபிறகு, ஒர்க்-லைப் பேலன்ஸ் செய்யவேண்டும் என்றால், நேர மேலாண்மை மிக அவசியம். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அப்பாலும், அதற்கு முன்னரும், வேலையை தொடரக்கூடாது என்பதை கடைபிடியுங்கள்.
வாரத்தில் ஒரு நாளையாவது உங்களுக்கென செலவிடுங்கள்
ஒரு அட்டவணையைப் பின்பற்றவும்: ஒரு அட்டவணை பின்பற்றி, திட்டமிடுவதால், உங்கள் நேரத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திகிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம். முன்னுரிமைகளை அமைத்து, இந்த முன்னுரிமைகளைச் சுற்றி ஒரு அட்டவணையை உருவாக்கவும். உங்கள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கென ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட வேண்டும். தள்ளிப்போட வேண்டாம்: தள்ளிப்போடும் எண்ணம் தோன்றும்போதெல்லாம், இந்த பணியை முடித்த பிறகு உங்களுக்கு எவ்வளவு ஓய்வு நேரம் கிடைக்கும் என்பதையும், அந்த நேரத்தை எப்படி செலவிடுவீர்கள் என்பதையும் நீங்கள் சிந்திக்கலாம். அது உங்களை உத்வேகப்படுத்தும். எல்லைகளை வரையறுக்கவும்: குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அலுவலக வேலையில் ஈடுபட கூடாது, அதேபோல, உங்கள் குடும்பத்தினரிடமும் அன்புக்குரியவர்களிடமும் அவசியம் இல்லாமல், வேலை செய்யும் போது குறுக்கிட வேண்டாம் என்று தெளிவாக குறிப்பிடவேண்டும்.