பெற்றோர்களே, WFH செய்கிறீர்களா? வேலையையும், குடும்பத்தையும் நிர்வாகிக்க உங்களுக்கான டிப்ஸ்
கொரோனா காலத்திலும், அதன் பிறகும், அநேகம் பேர் WFH (ஒர்க் ஃபிரம் ஹோம்) வாய்ப்பை பயன்படுத்தி வருகிறார்கள். வீட்டிலிருந்து கொண்டே வேலை செய்வதிலும் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கும். வீட்டிலிருக்கும் குழந்தைகள் உங்கள் கவனத்தை எதிர்பார்ப்பார்கள். அதே சமயம் உங்களுக்கு முக்கியமான அலுவல்களும் வரும். இவ்விரண்டையும் சாமர்த்தியமாக சமாளிக்க சில டிப்ஸ்: அமைதியை கடைபிடிக்க அறிவுறுத்தும் சமிக்ஞைகள்: குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது, இரைச்சலாக விளையாடிக்கொண்டோ, உங்களிடம் உரையாடிக்கொண்டோ இருக்கலாம். உங்கள் கவனம் சிதறடிக்கப்படாமல், நீங்கள் வேலை செய்ய வேண்டி இருந்தால், அமைதியை கடைபிடிக்க அறிவுறுத்தும் வகையில் சில சமிக்ஞைகளை உபயோகிக்கலாம். உதாரணத்திற்கு உங்கள் அறையின் கதவில் 'டூ நாட் டிஸ்டர்ப்' (Do not disturb) என்ற பலகையை மாட்டலாம்.
குழந்தை வளர்ப்பில் பெற்றோர் இருவரின் பங்கு
குழந்தை வளர்ப்பை துணையுடன் பகிருங்கள்: குழந்தையை கவனிக்க வேண்டிய பொறுப்பை, உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் முக்கிய அலுவலில் இருக்கும் போது, சிறிது நேரம் உங்கள் துணை, குழந்தையை கவனித்து கொள்ளலாம். நீங்களும், உங்கள் துணைக்கு உதவலாம். அந்த வகையில், குழந்தையை தனித்து விட்டதாக குற்ற உணர்ச்சிக்கு ஆளாக தேவை இல்லை. சக ஊழியர்களிடம் வெளிப்படைத்தன்மை: சில நேரங்களில், நீங்கள் அலுவல் வேலைகளின் நடுவே, உங்கள் குழந்தைகளின் மீது அதிக கவனம் கொள்ள நேரலாம். அந்த சமயங்களில், குற்றஉணர்வின்றி, உங்கள் நிலைமையை சக ஊழியர்களிடம் வெளிப்படுத்தலாம். தவறேதுமில்லை. தன்னிச்சையாக செயல்பட குழந்தைகளை ஊக்குவிக்கவும்: குழந்தைகள் தங்கள் அன்றாட வேலைகளை, தன்னிச்சையாக செய்வதற்கு பழக்கலாம். வீட்டுப்பாடம், விளையாட்டு என அவர்கலாகவே செயல்பட ஊக்குவிக்கலாம்.