கொளுத்தும் வெயில்; கொட்டும் வியர்வை; சமாளிக்க குட்டி டிப்ஸ்
கோடைக்காலம் என்பது பலருக்கும் விடுமுறை காலம். சுற்றுலா காலம். ஆனாலும், எந்த ஊருக்கு சென்றாலும், அடிக்கும் வெயிலில், உச்சி முதல் பாதம் வரை, மழை அருவியாய் வியர்க்கும். நிச்சயம் அது அனைவருக்கும் எரிச்சல் தரக்கூடிய விஷயம் தான். சில நேரங்களில் அதிக வியர்வை உடல் உபாதைகளுக்கும் வழிவகுக்கும். அதை சமாளிக்க சில எளிய முறைகள் உள்ளன. உடுத்துவதற்கு பருத்தி துணிகளைத் தேர்ந்தெடுப்பது முதல் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது வரை, கோடை காலத்தில், உங்களை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியத்துடனும் பாதுகாக்க இந்த குறிப்புகள் உதவும். வியர்வையை தூண்டும் உணவுகளை தவிர்க்கவும்: நாம் தினசரி உண்ணும் உணவுகளும், வியர்வைக்கான காரணிகளில் ஒன்று. ஆல்கஹால், காஃபின் நிறைந்த பானங்கள், மற்றும் காரமான உணவுகள், உங்களுக்கு அதிக வியர்வை உண்டாக்கும்.
தளர்வான பருத்தி துணிகளை அணியுங்கள்
பருத்தி ஆடைகளை அணியுங்கள்: கோடை வெயிலை சமாளிக்க, பருத்தி அல்லது கைத்தறி ஆடைகளை அணியுங்கள். குறிப்பாக ஆடைகள் தளர்வாக அணிய முயற்சி செய்யுங்கள். கால்களுக்கு, முடிந்த வரை செருப்புகளையே அணியுங்கள். சாக்ஸ் உடன் ஷூஸ் அணிவதை தவிர்க்கலாம். உங்கள் அறையை, குளிர்ச்சியாக வைத்திருக்கவும்: உங்கள் அறையை முடிந்த வரை குளிர்ச்சியாக வைத்திருக்கவும். உஷ்ணம் உள்ளே வருவதை தடுக்க, ஜன்னலுக்கு ஸ்க்ரீன் போடுங்கள். பேன், AC போன்றவற்றை பயன்படுத்தி, காற்றோட்டமாக வைத்திருக்கவும். ஆப்பிள் சைடர் வினிகரைப் பயன்படுத்தவும்: ஆப்பிள் சைடர் வினிகரை, மாலையில் உங்கள் அக்குள்களில் தடவலாம். இது இரவு முழுவதும், வியர்வையைக் கட்டுப்படுத்த உதவும். மாய்ஸ்சரைசர்: தினசரி மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருங்கள். அது வியர்வினால் உடலில் ஏற்படும் உபாதைகளை தவிர்க்க உதவும்.