அட்சய திருதியை 2023: சரியான தங்க நகைகளை எப்படி தேர்வு செய்வது?
இன்று, ஏப்ரல் 22 அன்று, அக்ஷய திரிதியை கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாளில், தங்கம் வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது. இந்த நாளில், நகைக்கடைகளும் சலுகைகளை அறிவித்து, வாடிக்கையாளர்களை ஈர்க்க பல யூகித்திகளை பயன்படுத்துவார்கள். தங்க நகைகளை வாங்குவதற்கு முன், நீங்கள் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன: தூய்மையா? நகையின் ஆயுளா? என தீர்மானிக்கவும்: அதிக காரட் தங்கம், தூய்மையானது, மதிப்புமிக்கது. ஆனால் மென்மையானது. அதனால் எளிதில் கீறல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மறுபுறம், லோயர் காரட் தங்கம், நீடித்து உழைக்கும். ஆனால் பளபளப்பாக இருக்காது. இன்றும், 18kt தங்கம் சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. அதே சமயம் 14kt தங்கம், லைட் வெயிட் நகைகளை விரும்புவோருக்கு ஏற்றது.
தங்கத்தின் தரத்தை உறுதி செய்ய சான்றிதழை சரிபார்க்கவும்
தங்கத்தின் நம்பகத்தன்மை: தங்கத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த சரியான சான்றிதழை சரி பார்த்து வாங்கவும். இந்திய தரநிலைகளின் பணியகம் (BIS) அடையாளங்கள் அல்லது சர்வதேச ரத்தினவியல் நிறுவனம் (IGI) அல்லது அமெரிக்காவின் ஜெமோலாஜிக்கல் நிறுவனம் (GIA) போன்ற சர்வதேச சான்றிதழ்கள் போன்றவற்றை உறுதி செய்த பின் வாங்கவும். மேக்கிங் சார்ஜஸ்: பொதுவாக, நகைகளுக்கு உண்மையான மதிப்புடன் கூடுதலாக 8-10% மதிப்பிடுவார்கள். அதிக வேலைப்பாடில்லாத நகைகளுக்கு மேக்கிங் சார்ஜஸ் குறைவாகவே இருக்கும். அதனால் பேரம் பேசி வாங்கவும். பட்ஜெட்: அட்சய திருதியைக்கு நகைகள் வாங்குவது நல்லது தான். ஆனால் உங்கள் பட்ஜெட்டை மனதில் வைத்துக் கொள்வது அவசியம். நகைகளை வாங்குவதற்கு முன் உங்கள் தேவையையும், உங்கள் பட்ஜெட்டையும் நினைவில் கொள்ளுங்கள்.