கவரிங் நகைகளின் பொலிவை காப்பாற்றுவது எப்படி? வல்லுநர்கள் தரும் டிப்ஸ்
தங்கம் விற்கும் விலைக்கு, பலரும், தற்போது கவரிங் நகைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். பலவகைகளில், குறைந்த விலையில், பலவித வேலைப்பாடுகளில் கிடைக்கும் இந்த நகைகளை, பாதுகாப்பது தான், பல நேரங்களில் கவலை தரும் விஷயமாக இருக்கிறது. சில நேரங்களில், ஒரு பயன்பாட்டிலேயே, அந்த நகைகள் பொலிவை இழக்கின்றன, சில நேரங்களில், கறுத்து போகின்றது போன்ற கவலைகளுக்கு, நிபுணர்கள் தீர்வு தருகிறார்கள். நகைகளை ஜிப்லாக் பைகளிலோ அல்லது காற்று புகாத பெட்டிகளிலோ சேமிக்கவும்: இவ்வகையில், நகைகளை பாதுகாப்பதால், நகையின் பொலிவு நீண்ட நாள் இருக்கும். இருப்பினும், உங்கள் நகைகளை ஒரு பிளாஸ்டிக் பைகளில் சேமிக்கும் முன், பருத்தி, டார்னிஷ் எதிர்ப்பு காகிதம் அல்லது மென்மையான துணியில் சுற்றி, அதன் பின்னர் பிளாஸ்டிக் கவரில் வைக்க வேண்டும்.
தண்ணீரிலிருந்து கவரிங் நகைகளை பாதுகாக்கவும்
மேக்அப் பொருட்களிலிருந்து விலக்கி வைக்கவும்: மேக்அப் பொருட்களில் இருக்கும் கெமிக்கல்கள், உங்கள் நகைகளில் பட்டால், எதிர்வினைகளை உண்டாக்கும். அதனால், எப்போதும், நகைகளை அணியும் போது, உங்கள் மேக்அப்போ, வாசனை திரவியமோ, அல்லது கிரீமோ அதன் மேல் படாதவாறு கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் நகைகளை தனித்தனியாக சேமிக்கவும்: பலருக்கும், பேஷன் நகைகளை ஒரே பாக்ஸில் போட்டு வைக்கும் பழக்கம் உண்டு. அது தவறு என்கிறார்கள் வல்லுநர்கள். நகைகளை ஒரே இடத்தில சேமிப்பதால், அவை ஒன்றோடொன்று உரசி, கீறல்கள் விழ வாய்ப்புள்ளது. தண்ணீர் படாமல் பாதுகாக்கவும்: கவரிங் நகைகள் மீது, தண்ணீர் பட்டால், குறிப்பாக கிளோரின் அல்லது உப்பு நிறைந்த தண்ணீர் பட்டால், அது சேதமாகிவிடும். அதனால், முடிந்தவரை குளிக்கும் முன்னர், அவற்றை கழட்டி வைக்கவும்.