Page Loader
ஆறுதல் அளித்த தங்கம் விலை - சற்று சரிவு! விலை விபரங்கள்
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று ஏப்ரல் 03 இல் 25 ரூபாய் குறைந்துள்ளது

ஆறுதல் அளித்த தங்கம் விலை - சற்று சரிவு! விலை விபரங்கள்

எழுதியவர் Siranjeevi
Apr 03, 2023
01:05 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. அமெரிக்க வங்கிகள் திவால் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டாலும், ஒரு சில நாட்களில் அதிரடியாக சரிவதும் உண்டு. இந்நிலையில், இன்றைய நாள் ஏப்ரல் 03 ஆம் தேதி படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் குறைந்து 5,535 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரன் ஒன்றுக்கு 200 ரூபாய் குறைந்து ரூ.44,280 ஆக விற்பனையாகிறது.

தங்கம் விலை

தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது - இன்றைய நிலவரம்

18 காரட் ஆபரண தங்கமானது கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்து 4,534 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.160 வரை குறைந்து ரூ.36,272 ஆகவும் விற்பனையாகிறது. டெல்லியில் 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 55,150 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கம் 60,150 ஆகவும் உள்ளது. கொல்கத்தாவில் 10 கிராம், 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 55,000 ஆகவும், 10 கிராம், 24 காரட் ரூ. 60,000 ஆகவும் விற்பனையாகி வருகிறது. வெள்ளியின் விலை சென்னையில், வெள்ளியின் விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.77.10 எனவும், கிலோ ஒன்றிற்கு ரூ.77,100 எனவும் விற்பனையாகிறது.