Page Loader
எகிறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்
தங்கம் விலையானது ஏப்ரல் 01-இல் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது.

எகிறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்

எழுதியவர் Siranjeevi
Apr 01, 2023
11:12 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. அமெரிக்க வங்கிகள் திவால் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டாலும், ஒரு சில நாட்களில் அதிரடியாக சரிவதும் உண்டு. இந்நிலையில், இன்றைய நாள் ஏப்ரல் 01 ஆம் தேதி படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 44,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை

தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது - இன்றைய நிலவரம்

தங்கம் கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 5,560-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை வெள்ளியின் விலையை பொறுத்தவரையில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து ரூ.77.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. இதைத்தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும். அதனால் தான், குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.