
அட்சய திருதியை எதற்காக கொண்டாடுகிறார்கள் என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
இன்று, இந்தியா முழுவதும், அட்சய திரிதியை விசேஷ நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தவரும், சமண மதத்தவரும் இந்த நாளை கொண்டாடுவது ஆண்டாண்டு கால மரபாகும்.
இந்த நாளில் தொடங்கும் எந்த ஒரு விஷயமும், வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. இந்த நாளை, அதிர்ஷ்டம், வெற்றி தரும் நாளாக பார்க்கிறார்கள்.
ஆங்கில நாட்காட்டியின்படி, இது ஏப்ரல்-மே மாதங்களில் வருகிறது. சமணர்கள் இந்த நாளை 'அகா தீஜ்' என்று அழைக்கிறார்கள்.
விநாயகப் பெருமானும், வேத வியாசரும், இந்த நாளில் தான் மகாபாரதத்தை எழுத தொடங்கினார்கள்.
இந்த நாள், விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணர் தனது உதவியை நாடிவந்த சுதாமாவுக்கு செல்வத்தை வாரி வழங்கிய நாள் இது.
card 2
குபேரன், லக்ஷ்மியை வணங்கி ஐஸ்வர்யத்தை பெற்ற நாள்
இந்த நாளில்தான் குபேரர், லட்சுமி தேவியை வழிபட்டார் என்றும், இதனால் தான் அவருக்கு, ஐஸ்வர்யங்கள் அருளும் கிடைத்தது என்றும் கூறப்படுகிறது.
சமண மதத்தில், இந்த நாள் அவர்களின் முதல் கடவுளான ஆதிநாதரை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.
இந்த நாள், புதிய தொடக்கங்களுக்கு உகந்த நாள் என்பார்கள். ஆகையால், புதிய பிரயாணங்கள், தொழில், திருமணம் ஆகியவை செய்யலாம்.
விஷ்ணு பக்தர்கள், இந்த நாளில் விரதம் இருந்து, எளியவர்களுக்கு உதவி செய்வார்கள்.
வடமாநில வணிகர்கள் சிலர், இந்த நாளில், லட்சுமி-ஐ பூஜித்து, புதிய கணக்கை துவங்குவார்கள்.
இந்த நாளில், லக்ஷ்மியின் அடையாளமான தங்கத்தை வாங்குவதால், வாழ்க்கையில் ஐஸ்வர்யம் வந்து சேரும் என்பதும் ஐதீகம்.