அடுத்த செய்திக் கட்டுரை
உணவகத்தில், உங்கள் ஃபேவரைட் உணவிற்கு, உங்கள் பெயரை சூட்டினால் எப்படி இருக்கும்!
எழுதியவர்
Venkatalakshmi V
May 03, 2023
02:19 pm
செய்தி முன்னோட்டம்
நீங்கள் அடிக்கடி செல்லும் ஒரு உணவகம், நீங்கள் விருப்பமாக தேர்வு செய்யும் ஒரு உணவிற்கு உங்கள் பெயரையே சூட்டி, அதை மெனுகார்டிலும் அச்சடித்தால், எப்படி உணருவீர்கள்?!
அப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அயர்லாந்து நாட்டில் நடந்துள்ளது.
அயர்லாந்து நாட்டை சேர்ந்த பிரபல உணவகம், 'Grangecon Kitchen'. அந்த உணவகத்திற்கு வரும் ரெகுலர் கஸ்டமர், ஜான் என்ற முதியவர்.
அவர், ஓவ்வொரு முறையும், இறைச்சியும், வேகவைத்த காய்கறிகளும், முட்டையும் தான் ஆர்டர் செய்வாராம்.
அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு, அவரின் ஃபேவரைட் காம்போ உணவிற்கு, 'John's breakfast' என பெயரிட்டது அந்த உணவகம்.
அடுத்த நாள் காலை, மெனு கார்டில் அதை பார்த்த ஜானிற்கு ஆச்சரியம். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.