NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / ஒரே வருடத்தில் 6 லட்சத்திற்கு இட்லி வாங்கி இருக்கும் ஹைதராபாத் ஆசாமி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே வருடத்தில் 6 லட்சத்திற்கு இட்லி வாங்கி இருக்கும் ஹைதராபாத் ஆசாமி
    தென்னிந்தியா மக்களின் பாரம்பரிய உணவாக இட்லி இருக்கிறது என்பதை ஸ்விக்கியின் அறிக்கை நிரூபிக்கிறது

    ஒரே வருடத்தில் 6 லட்சத்திற்கு இட்லி வாங்கி இருக்கும் ஹைதராபாத் ஆசாமி

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 31, 2023
    04:02 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டது. அந்த நாளை போற்றும் விதமாக, உணவு டெலிவரி பார்ட்னராக ஸ்விக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

    அதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த இட்லி பிரியர் ஒருவர், கடந்த வருடத்தில் மட்டும், 6 லட்ச ரூபாய்க்கு இட்லி ஆர்டர் செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நபர், சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் வசிக்கும் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கும், 8,428 இட்லிகளை ஆர்டர் செய்துள்ளாராம்.

    மார்ச் 30, 2022 முதல் மார்ச் 25, 2023 வரையிலான ஆர்டர்களில் இருந்து இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

    ஸ்விக்கி அறிக்கை

    தென்னிந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு இட்லி

    அதுமட்டுமின்றி, சென்னை, ஹைதராபாத், பெங்களூர், கோயம்புத்தூர் மற்றும் மும்பையை சேர்ந்த பயனர்கள், பெரும்பாலும் காலை 8 மணி முதல் 10 மணி வரை இட்லியை தேர்வு செய்வதாகவும், பல நேரங்களில் இரவு உணவிற்காகவும் இட்லிகளை ஆர்டர் செய்துள்ளதாக அந்த ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

    பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் தான், இட்லிகளை அதிகம் ஆர்டர் செய்யும் டாப் 3 நகரங்கள் ஆகும்.

    இட்லிக்கு அடுத்தபடியாக, ரவா இட்லி பெங்களூரில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதே போல, நெய் இட்லி மற்றும் நெய் கார பொடி இட்லி தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பிரபலமாக ஆர்டர் செய்யப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்விக்கி
    இந்தியா

    சமீபத்திய

    இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்! கனிமொழி
    பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ எஸ்யூவி
    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்
    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாடு

    ஸ்விக்கி

    உணவு டெலிவரி செய்து அசத்தும் மாற்றுத்திறனாளி - வைரல் வீடியோ! கர்நாடகா

    இந்தியா

    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு உக்ரைன்
    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு கொரோனா
    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    மின்சார வாகனம் ஊக்குவிப்பு - ரூ.800 கோடியில் உருவாகும் சார்ஜ் நிலையங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025