புதிதாக ஒரு ரிலேஷன்ஷிப்பில் இணைகிறீர்களா? உங்களுக்காகவே சில முக்கிய டிப்ஸ்
மனிதன் உயிர்வாழ அத்தியாவசிய தேவைகள் மட்டுமின்றி, காதல் உணர்வும் அவசியமாகிறது. அது ஒரு மனிதனின் அடிப்படை தேவையாக பார்க்கப்படுகிறது. ஒருவர்பால் கொண்டிருக்கும் நேசத்தையும், உள்ளதின் ஆசைகளையும் வெளிப்படுத்தும் காதல். இரு மனிதரின் இயக்கத்தை ஒன்றிணைப்பது, அவர்கள் இருவரும் கொண்டிருக்கும் புரிதல் தான். அது போல, ஒரு காதல் உறவில், இரு மனிதர்களும் வெற்றிகரமாக பயணப்பட, புரிதல் அவசியமாகிறது. நீங்கள் நேசிக்கும் ஒரு உறவை, கடைசி வரை உங்களுடன் பயணப்பட வேண்டும் என நினைத்தால், அந்த உறவை பேணுவதற்கு சில விஷயங்களை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். அவை: நம்பிக்கையை உருவாக்குதல்: எந்தவொரு ஆரோக்கியமான உறவுக்கும், நம்பிக்கை தான் அடிப்படை. உங்கள் துணைக்கு நீங்கள் அவர்களை முழுவதுமாக நம்புகிறீர்கள் என்ற உத்தரவாதத்தை கொடுங்கள்.
உறவில் இருக்கும் இருவரும் பரஸ்பர மரியாதையுடன் நடப்பது அவசியம்
பரஸ்பர மரியாதை: உறவில் இருக்கும் இருவரும், அவர்கள் துணையின் எல்லைகள், கருத்துகள் மற்றும் உணர்வுகளை மதிக்க வேண்டும். ஒருவரையொருவர் இழிவுபடுத்தக்கூடாது. எப்போதும் ஒருவரையொருவர் சமமாக நடத்த வேண்டும். உணர்வுபூர்வமான ஆதரவு: உறவில் இருக்கும் போது, ஒருவருக்கொருவர் ஆதரவை தடைகளின்றி வழங்க வேண்டும்.உங்கள் துணைக்கு ஏற்படும் பிரச்சனைகளைக்கு செவிமடுத்து, உங்கள் ஆறுதலையும் ஊக்கத்தையும் அளிக்க தவறக்கூடாது. பொறுப்பு: எந்தவொரு ஆரோக்கியமான உறவுக்கும், உங்கள் செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வது முக்கியம். நேர்மையான தொடர்பு: எந்தவொரு ஆரோக்கியமான உறவிலும் நேர்மையான தொடர்பு அவசியம். உறவில் இருக்கும் இருவரும், ஒளிவு மறைவின்றி, தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துதல் அவசியம். அதேபோல, எண்ணங்களை மற்றவர் வெளிப்படுத்தும் போது, அவர்கள் பக்க நியாயத்தை புரிந்து கொள்ளுதலும் அவசியமாகிறது.