உங்கள் குடல் ஆரோக்கியத்தை மோசமாக்கக்கூடிய தினசரி உணவுகள்
செய்தி முன்னோட்டம்
நமது குடலில் 100 டிரில்லியனுக்கும் அதிகமான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. அவை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அதன் மேம்பாட்டிற்கும் உதவி செய்கின்றன.
அவர்களின் செயல்பாட்டை பாதிக்கும் பல காரணிகளில், முக்கியமானது நீங்கள் தினசரி உண்ணும் உணவு.
உங்கள் குடல், உங்கள் உணவு செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் முக்கிய பங்கு வகிப்பதால், அவற்றின் ஆரோக்கிய செயல்பாடு மிகவும் அவசியமாகிறது.
ஒருவரின் குடல் ஆரோக்கியத்தை சேதப்படுத்தும் பல உணவுகள் உங்கள் அன்றாட உணவின் ஒரு பகுதியாக இருக்கிறது.
உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, கீழ்க்காணும் உணவுகளை தவிர்க்கவும்.
card 2
பொறித்த உணவுகள்
பல்வேறு மனித மற்றும் விலங்கு ஆய்வுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்த உண்மை என்னவென்றால், பொறித்த உணவுகளில் உள்ள எண்ணெய், ஒருவரின் குடலில் இருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியாவை தாக்குகிறது என்பதுதான்.
அது மட்டுமல்லாமல், அமிலத்தன்மை, வாயு, வயிற்றுப் பிடிப்பு, வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல குடல் நோய்களை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அந்த எண்ணெய் உணவு ஊக்குவிக்கிறது.
மேலும், வறுத்த உணவுகளில் பொதுவாக ஆரோக்கியமற்ற டிரான்ஸ் கொழுப்புகள் அதிகம்.
card 3
செயற்கை இனிப்புகள்
செயற்கை இனிப்புகளை நீங்கள் ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான மற்றொரு காரணம் (மிக முக்கியமான ஒன்று!) அவை உங்கள் குடலில் நோய்க்கிருமிகளை ஊக்குவிப்பது மட்டுமின்றி ஆரோக்கியமான பாக்டீரியாக்களை சேதப்படுத்துகின்றன.
ஒரு ஆய்வில், பல செயற்கை இனிப்புகள், குளுக்கோஸ் சகிப்புத்தன்மையின் அபாயத்தை அதிகரிக்கின்றன என்றும், இதனால் உடலில் வீக்கம் ஏற்படுகிறது என்றும், இது நீரிழிவு போன்ற பல்வேறு நாட்பட்ட நோய்களுக்கான நுழைவாயிலாக மாறக்கூடும் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
card 4
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
அதிகப்படியான சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை உட்கொள்வது உங்கள் உடல் அமைப்பிலிருந்து, நல்ல பாக்டீரியாக்களை அகற்றுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் பற்றாக்குறை, வீக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் குமட்டல், வாயு, எரிச்சல் கொண்ட குடல், மலச்சிக்கல் மற்றும் மன அழுத்தம், பதட்டம் போன்ற மனநலப் பிரச்சனைகள், உடல் நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
சுக்ரோஸ், அதிக பிரக்டோஸ் கொண்ட கார்ன் சிரப் மற்றும் நீலக்கத்தாழை சிரப் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.
card 5
ஆண்டிபயாடிக் அடங்கிய உணவுகள்
ஆண்டிபயாடிக்குகள் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்று இப்போது நீங்கள் யோசிக்கலாம்.
இந்த தருணத்தில், அது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். மருத்துவர் ஆலோசனையின்றி அடிக்கடி ஆண்டிபயாடிக்குகள் எடுப்பது தவறு.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள், நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களுக்கு இடையே பாரபட்சம் பார்க்காமல், அனைத்தையும் அவை கொல்லும்.
உலகெங்கிலும் உள்ள விவசாயிகள், அடிக்கடி நோய்த்தொற்றுகள் உருவாகும் அபாயத்தைத் தணிக்க, வலுவான நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
மேலும், இந்த தொடர்ச்சியான வெளிப்பாடு, அந்த விலங்குகளின் தயாரிப்புகளை (பால்) மனிதனின் குடலுக்கு தகுதியற்றதாக ஆக்குகிறது.