உங்கள் குடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
வயிற்றுப் பிரச்சனைகள், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். குடலுக்கும், மனித மூளைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர். மூளையைப் போலவே, உங்கள் குடலில், நரம்பு மண்டலம் அல்லது ENS எனப்படும் நரம்புகள் நிறைந்துள்ளன. இதை "இரண்டாவது மூளை" என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். உங்கள் மத்திய நரம்பு மண்டலத்தில் காணப்படும் அதே வகையான நியூரான்கள் மற்றும் நரம்பியக்கடத்திகள் குடல் நரம்பு மண்டலத்தில் உள்ளன. ENS அமைப்பில், 100 மில்லியனுக்கும் அதிகமான நரம்பு செல்கள், இரண்டு அடுக்குகளாக அமைந்துள்ளது. இது உணவுக்குழாய் முதல் மலக்குடல் வரை நீள்கிறது.
உங்கள் குடல் மற்றும் மூளை எவ்வாறு தொடர்பு கொள்கிறது?
உங்கள் இரண்டாவது மூளை (ENS), உங்கள் செரிமானத்தை, விழுங்குவதில் இருந்து நொதிகளின் வெளியீடு வரை நிர்வாகித்து, கட்டுப்படுத்துகிறது. இது உணவை சிறிய துகள்களாக உடைப்பதை உறுதி செய்து, ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் நீக்குதலுக்கான இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. பல தசாப்தங்களாக, மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவையுடன் எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (IBS) மற்றும் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வீக்கம், வலி மற்றும் வயிற்று வலி தொடர்பு படுத்தப்பட்டது. தற்போதைய கண்டுபிடிப்பின் படி, இது ENS காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ENS, நரம்பு மண்டலம், ஹார்மோன்கள் மூலம் உங்கள் மூளையுடன் தொடர்பு கொள்கிறது. இப்படிதான், உங்கள் குடல் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு இடையே தகவல் பரிமாற்றம் நடைபெற்று, உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
மன அழுத்தம் தொடர்பான குடல் அறிகுறிகள்
பதட்டமாகவோ அல்லது கவலையாகவோ இருக்கும்போது, உங்கள் உடல் செரிமான அமைப்பில் சில ஹார்மோன்கள், இரசாயனங்களை வெளியிடுகிறது. இது உங்கள் குடலில் வாழும் நுண்ணுயிரிகளை பாதிக்கலாம். ஆன்டிபாடி, உற்பத்தியை குறைக்கும் போது செரிமான செயல்பாட்டில் குறைபாடு ஏற்படுகிறது. இதன் விளைவாக பல இரைப்பை குடல் கோளாறுகள் ஏற்படுகிறது: அஜீரணம் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) மலச்சிக்கல் பசியின்மை அல்லது அசாதாரண பசி குமட்டல்
உங்கள் குடல் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது
உங்கள் உணவை திறம்பட ஜீரணிக்க, உணவுக்குப் பிறகு, உணவை உறிஞ்சுவதற்குத் தேவையான இரைப்பை சாறுகளை உற்பத்தி செய்ய, மனது ஒரு நிதானமான நிலையில் இருப்பது முக்கியம். ஆரோக்கியமான உடல் மற்றும் மூளையை பெற தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு இந்த இரைப்பை சாறு அவசியம். அதனால் நீங்கள் என்ன, எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஆரோக்கியமான தின்பண்டங்கள் மற்றும் உணவை உண்ணுங்கள். அதனோடு, உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வதும் அவசியமாகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்கவும், உங்கள் உடல் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவும். நிறைய தண்ணீர் குடிக்கவும். செரிமான செயல்முறையை அதிகரிக்க ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு கிளாஸ் தண்ணீர் வரை குடிக்க வேண்டும்.
மன ஆரோக்கியத்திற்கான உணவுகள்
நார்ச்சத்து: நார்ச்சத்து சாப்பிடுவது நினைவகத்தையும் ஒட்டுமொத்த மனநிலையையும் மேம்படுத்துகிறது. இது மைக்ரோபயோட்டாவை ஆதரிப்பதன் மூலம், வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளில் பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள், ஓட்ஸ், நட்ஸ், டார்க் சாக்லேட், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை அடங்கும். வைட்டமின் டி: வைட்டமின் டி உங்கள் நுண்ணுயிரியை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் இரைப்பை குடல் அழற்சியைக் குறைக்கிறது. புரதம்: புரதங்களில் நைட்ரஜன் உள்ளது. இது நுண்ணுயிரியிலுள்ள கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது. உங்கள் மனநிலையை மேம்படுத்தும் செரோடோனின் உற்பத்தியின் காரணமாக புரதத்தை சாப்பிடுவதால் மனச்சோர்வு உணர்வுகள் குறையும். ஒமேகா-3கள்: ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கவும், பசியைக் குறைக்கவும் உதவுகின்றன.