NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / மிருகங்களை தெய்வங்களாக வணங்கும் வித்தியாசமான கோவில்கள்
    மிருகங்களை தெய்வங்களாக வணங்கும் வித்தியாசமான கோவில்கள்
    வாழ்க்கை

    மிருகங்களை தெய்வங்களாக வணங்கும் வித்தியாசமான கோவில்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    April 28, 2023 | 01:18 pm 0 நிமிட வாசிப்பு
    மிருகங்களை தெய்வங்களாக வணங்கும் வித்தியாசமான கோவில்கள்
    ராஜஸ்தானில் ஒரு கோவிலில் எலிகளை தெய்வமாக வணங்குகின்றனர் என்றால் நம்பமுடிகிறதா?

    மிருகங்களை தெய்வங்களாக வணங்கும் பழக்கம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் பல கோவில்களில் நடைபெறுகிறது. கோமாதாவாக பசுவையும், கருடனாக பருந்தையும், நந்தி தெய்வமாக காளையையும் நாம் வணங்குவதை போல, சில கோவில்களில் எலியையும், முதலையையும் கூட வணங்குகிறார்கள். ஆச்சரியமாக உள்ளதா? அந்த விசித்திர கோவில்கள் எங்கு உள்ளது என தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பசுக் கோயில்: இந்தியாவின் சிக்மகளூரில் உள்ள காமதேனு கோயில், இந்து புராணங்களில் தெய்வீகப் பசுவாக கருதப்படும், காமதேனுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காமதேனு, அனைத்து பசுக்களுக்கும் தாயாகவும், செழிப்பு, கருவுறுதல் மற்றும் ஊட்டச்சத்தின் தெய்வமாகவும் கருதப்படுகிறது. கேட்டதை தரும் ஆற்றல் படைத்த காமதேனுவின் அலையத்திற்கு வருகை தருபவர்களுக்கு, நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கிடைப்பதாக நம்பப்படுகிறது.

    முதலையும், பூனையும் தெய்வங்களாம்

    முதலை கோவில், தாய்லாந்து: தாய்லாந்தில் உள்ள மே சாரியாங் நகரில் அமைந்துள்ள வாட் சோங் காம் கோவில். கோவிலை சுற்றி அமைந்துள்ள ஆற்றில் இருக்கும் முதலைகள் தான் மூலதெய்வம். இந்த கோவிலில் உள்ள துறவிகள் அங்குள்ள முதலைகளுக்கு தினசரி உணவுகளை அளிக்கின்றன. கோவிலுக்கு வரும் பார்வையாளர்கள் முதலைகளை அருகில் இருந்து பார்க்கவும், ஆற்றில் படகு சவாரியும் செய்யலாம். குரங்கு கோயில், நேபாளம்: காத்மாண்டு நகரின் மேற்கே, மலையின் மேல் அமைந்துள்ள ஸ்வயம்புநாத் ஸ்தூபா என்ற கோவிலில், அங்கு வசிக்கும் குரங்குகளை வணங்குகின்றனர். பூனைக் கோயில், ஜப்பான்: டோக்கியோவின் செட்டகயா வார்டில் அமைந்துள்ள கோடோகுஜி கோயில், பூனைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட புத்த கோயிலாகும். கர்னி மாதா கோயில், ராஜஸ்தான்:இங்கு எலிகளுக்கு உணவளித்து, கோவில் கட்டி வணங்குகின்றனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கோவில்கள்
    உலகம்

    கோவில்கள்

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு  தமிழ்நாடு
    3,500 ஆண்டு பழமையான மாமரம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள்  தமிழ்நாடு
    திருநெல்வேலி உச்சிஷ்ட விநாயகர் கோயில் - சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு  திருநெல்வேலி
    சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு சென்னை

    உலகம்

    பறவை காய்ச்சல் அதிகரிப்பு: 30,000 கோழிகளை கருணைக்கொலை செய்ய இருக்கும் டென்மார்க் உலக செய்திகள்
    வட கொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அதோடு அவர்கள் ஆட்சி தகர்க்கப்படும்: ஜோ பைடன்  வட கொரியா
    சூடானில் இருந்து 1100 இந்தியர்கள் மீட்பு; 360 பேர் இந்தியா வந்தடைந்தனர்  இந்தியா
    மாட்ரிட் ஓபன் 2023 தொடரிலிருந்து கடைசி நேரத்தில் விலகிய பிரபல வீராங்கனை விளையாட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023